Published : 31 Mar 2014 11:06 AM
Last Updated : 31 Mar 2014 11:06 AM

மலேசிய பாட்மிண்டன்: சௌரப் தோல்வி

மலேசியாவின் ஜோஹார் பாரு நகரில் நடைபெற்ற மலேசிய கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் சௌரப் வர்மா தோல்வி கண்டு சாம்பியனாகும் வாய்ப்பை இழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சௌரப் வர்மா 21-15, 16-21, 19-21 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் சைமன் சன்டோஸாவிடம் தோல்வி கண்டார். சமீபத்தில் நடைபெற்ற டாடா ஓபன், ஆஸ்திரேலியா மற்றும் ஈரான் சேலஞ்சர் போட்டிகளில் வாகை சூடிய சௌரப் வர்மா, தனது 4-வது இறுதிச்சுற்றில் தோல்வி கண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x