Last Updated : 09 Feb, 2017 09:58 AM

 

Published : 09 Feb 2017 09:58 AM
Last Updated : 09 Feb 2017 09:58 AM

இந்திய மகளிர் அணி வெற்றி

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்றில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தியது.

கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய நிலையில் நேற்று தாய்லாந்து அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த தாய்லாந்து அணி 29.1 ஓவரில் 55 ரன்களுக்கு சுருண்டது. அதிக பட்சமாக சுதிருவாங் 12, பூச்சாதம் 10 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் மான்சி ஜோசி 3 விக்கெட்களும், தீப்தி சர்மா, பூனம் யாதவ், கேக்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.

எளிதான இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 12.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்மான் பிரித் கவுர் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். திருஷ் காமினி 24, வேதா கிருஷ்ணமூர்த்தி 17 ரன்கள் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x