Published : 23 Jan 2017 10:45 AM
Last Updated : 23 Jan 2017 10:45 AM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்றுப் போட்டியில் உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, தரவரிசைப் பட்டியலில் 50-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் மிஸ்சா சரேவை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் ஆண்டி முர்ரே எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக சரேவ், 7 5, 5 7, 6 2, 6 4 என்ற செட்கணக்கில் முர்ரேவை வென்று அவருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
முர்ரேவை வென்ற சரேவ், கால் இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரரை எதிர்த்து ஆடுகிறார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் டேவிட் பெடரர் 6-7, 6-4, 6-1, 4-6, 6-3. என்ற புள்ளிக்கணக்கில் நிஷி கோரியை வீழ்த்தினார். நேற்று நடந்த மற்றொரு 4-வது சுற்று ஆட் டத்தில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியனான ஸ்டான் வாவ்ரிங்கா, 7-6, 7-6, 7-6 என்ற செட்கணக்கில் ஆண்டிரஸ் செப்பியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்றுப் போட்டியில் மூத்த வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், தரவரிசைப் பட்டியலில் 181-வது இடத்தில் உள்ள மோனா பார்த்தெலை 6 3, 7 5 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறி னார். காலிறுதியில் அவர் அனஸ் டாசியாவை எதிர்த்து ஆடவுள் ளார். மற்றொரு 4-வது சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீராங் கனையான கார்பைன் முகுருசா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ரொமேனிய வீராங்கனையான சொரானா சிஸ்டாவை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர், 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வாண்டேவாகேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பயஸ் ஜோடி வெற்றி
கலப்பு இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டி யில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை வெற்றி பெற்றது. இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் டெஸ்டேன் அயாவா - மார்க் பொல்மான்ஸ் ஜீடியை 6 4, 6 3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 51 நிமிடங்களில் நிறைவுற்றது.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்றுப் போட்டியில் சானியா மிர்சா - ஸ்டிரைகோவா இணை தோல் வியை சந்தித்தது. ஜப்பானின் எரி ஹோசுமி - மியூ காடோ இணை, சானியா - ஸ்டிரைகோவா ஜோடியை 6-3, 2-6, 6-2 என்ற செட்கணக்கில் போராடி வென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT