Last Updated : 20 Oct, 2014 03:01 PM

 

Published : 20 Oct 2014 03:01 PM
Last Updated : 20 Oct 2014 03:01 PM

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி 2-வது இடம்; டாப்-10-ல் புவனேஷ் குமார்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் புவனேஷ் குமார் முதல் முறையாக டாப்-10-ல் நுழைந்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளை 2-1 என்று வீழ்த்திய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் 127 ரன்கள் எடுத்த கோலி, மொத்தம் 191 ரன்கள் எடுத்தார். இதனால் 2-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஹஷிம் ஆம்லாவை பின்னுக்குத் தள்ளி அவரது இடத்தை கோலி பிடித்துள்ளார்.

பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி மாறாமல் அதே 6-வது இடத்தைத் தக்க வைத்துள்ளார். ஷிகர் தவன் ஒரு இடம் பின்னடைந்து 8-வது இடத்தில் இருக்கிறார்.

இடது கை வீரர் சுரேஷ் ரெய்னா 3 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தில் உள்ளார். பந்து வீச்சில் ஜடேஜா ஒரு இடம் பின்னடைவு கண்டு 6-வது இடத்திலும் புவனேஷ் குமார் 7 இடங்கள் முன்னேறி 7வது இடத்திற்கு வந்துள்ளார்.

மேற்கிந்திய தொடரில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மொகமது ஷமி 16-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அணிகள் தரவரிசையில் 113 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 3-0 என்று தென் ஆப்பிரிக்கா வென்றால் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x