Published : 27 Feb 2014 10:52 AM
Last Updated : 27 Feb 2014 10:52 AM

துபை டென்னிஸ்: சோம்தேவ் தோல்வி

துபையில் நடைபெற்று வரும் துபை “டியூட்டி ப்ரீ” டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சோம்தேவ் தனது 2-வது சுற்றில் தோல்வி கண்டார்.

புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சோம்தேவ் 3-6, 5-7 என்ற நேர் செட்களில் வைல்ட்கார்ட் வீரரான டுனீசியாவின் மாலேக் ஜேஸ்ரியிடம் தோல்வி கண்டார்.

தரவரிசையில் 78-வது இடத்தில் உள்ளவரான சோம்தேவ், 137-வது இடத்தில் உள்ள டுனீசிய வீரரிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறி யுள்ளார். இந்தப் போட்டியின் முதல் செட்டில் 3 முறை எதிராளியின் சர்வீஸை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்ற சோம்தேவ், அவையனைத் தையும் கோட்டைவிட்டார். தனது சர்வீஸையும் இருமுறை இழந்து முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்தார்.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் தனக்கு கிடைத்த 7 பிரேக் வாய்ப்புகளில் இரண்டை சரியாகப் பயன் படுத்தி ஜேஸ்ரியின் இரு சர்வீஸ்களை முறியடித்த சோம்தேவ், 3 சர்வீஸ்களை ஜேஸ்ரியிடம் இழந்து தோல்வி கண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x