Published : 28 Jun 2017 09:58 AM
Last Updated : 28 Jun 2017 09:58 AM
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப் பிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி முடிவெடுத்துள்ளார்.
கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே சில நாட்களுக்கு முன்பு விலகினார். இதைத்தொடர்ந்து புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்க விரும்புபவர்கள் தங்களிடம் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி திட்டமிட்டுள்ளார். லண்டனில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
55 வயதான ரவி சாஸ்திரி கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் இயக்கு நராக இருந்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அரை இறுதிச் சுற்று வரை முன்னேறியது. 2016-ம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா அரை இறுதி சுற்றுவரை முன்னேறியது. மேலும் இவர் பயிற்சியாளராக இருந்த சமயத் தில் இந்திய அணி 8 வாரங்கள் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்துள்ளது.
கடந்த ஆண்டும் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு பதில் அனில் கும்ப்ளே பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த முறை தான் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப் படாததால் அதிருப்தி அடைந்த ரவி சாஸ்திரி, தேர்வுக் குழுவில் இருந்த டெண்டுல்கர், வி.வி.எஸ்.லக்ஷ்மண், சவுரவ் கங்குலி ஆகியோரை கடுமையாக விமர்சித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஏற்கெனவே வீரேந்தர் சேவக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், டோடா கணேஷ், ரிச்சர்ட் பைபஸ் ஆகியோர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.
ஜூலை 26-ம் தேதி இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடை யிலான கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொட ருக்கு முன் புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT