Published : 15 Oct 2014 04:05 PM
Last Updated : 15 Oct 2014 04:05 PM
யூரோ கால்பந்துக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து குடியரசு அணி.
அயர்லாந்து அணியின் ஜான் ஓ’ஷியா 90-வது நிமிடத்தில் அடித்த கோலினால் ஆட்டம் 1-1 என்று டிரா ஆனது. இதனால் உலக சாம்பியன் ஜெர்மனி அதிர்ச்சி அடைந்தது.
ஜெர்மனி அணியே இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில், 71-வது நிமிடத்தில்தான் குரூஸ் மூலம் முதல் கோலை அடித்தது. இந்த வெற்றி மூலம் 9 ஆட்டங்களில் 7 புள்ளிகள் பெற்று அயர்லாந்து பிரிவு டி-யில் நல்ல நிலையில் உள்ளது.
தொடக்க நேர ஆட்டங்களில் அயர்லாந்து பாதுகாப்பு அமைப்பில் கவனம் செலுத்த ஜெர்மனி பெரும்பகுதி ஆதிக்கம் செலுத்தினாலும் இடைவேளைக்கு முன்பாக கோல் எதையும் அடிக்க முடியவில்லை.
மேலும் உலகக் கோப்பை இறுதியில் அர்ஜெண்டீனாவை வீழ்த்திய ஜெர்மனி அணியில் 5 வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.
ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் எரிக் டர்ம் 31 மீட்டர்கள் தொலைவிலிருந்து அடித்த ஷாட் கோலாக மாறவில்லை. இடைவேளைக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வாய்ப்பு இதுவே.
இடைவேளைக்குப் பிறகு லுகாஸ் பொடோல்ஸ்கி, கரிம் பெல்லராபி, டோனி குரூஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் அயர்லாந்துக்கு நெருக்கடி அளித்தனர். கடைசியில் 71வது நிமிடத்தில் குரூஸ் கோல் அடித்தார். ஜெர்மனியின் 17வது கோல் முயற்சியாகும் இது.
ஆனால் கடைசி நிமிடத்தில் அயர்லாந்து வீரர் ஜெஃப் ஹெண்ட்ரிக் அடித்த பாஸை ஓ’ஷியா கோலாக மாற்ற ஜெர்மனி அதிர்ச்சியடைந்தது.
“நாங்கள் இந்தக் கடைசி நிமிட கோலால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். கடைசி நிமிடங்களில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. இன்னொரு கோல் அடித்து முன்னிலையை நீட்டியிருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை, இந்த டிரா மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று ஜெர்மனி பயிற்சியாளர் ஜோக்கிம் லூ தெரிவித்தார்.
பிரிவு டி-யில் 4 புள்ளிகளுடன் ஜெர்மனி 4ஆம் இடத்தில் உள்ளது. அயர்லாந்து 7 புள்ளிகளுடன் 2ஆம் இடம் வகிக்கிறது.
4-ஆம் சுற்று தகுதிச் சுற்று ஆட்டங்களில் கிப்ரால்டர் அணியை ஜேர்மனியும், ஸ்காட்லாந்து அணியை அயர்லாந்தும் சந்திக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT