Published : 17 Jun 2017 10:04 AM
Last Updated : 17 Jun 2017 10:04 AM
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது குறித்து நான் கூறிய கருத்துக்கள் மேட்ச் பிக்ஸிங் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள் ளதாக தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என முன்னாள் வீரர் அமீர் சோஹைல் தனது நிலையை தெளிவுப்படுத்தி உள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நாளை மறுதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் மோத உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் அணி மேட்ச் பிக்ஸிங் மூலமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக மறைமுகமாக அந்நாட்டு முன்னாள் வீரர் அமீர் சோஹைல் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனியார் டி.வி. சானல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியதில் மகிழ்ச்சி அடையவேண்டாம். இவர்கள் திறமையின் அடிப்படை யில் முன்னேறவில்லை. ‘வெளிப்புற காரணிகளால்’ தான் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளனர்.
சர்ப்ராஸ் அகமது எதையும் சிறப்பாக செய்துவிடவில்லை. இந்த போட்டிகளில் நீங்கள் வெற்றி பெற யாரோ உதவி செய்துள் ளார்கள். இதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவதில் ஏதும் இல்லை. திரைக்கு பின்னால் என்ன நடைபெறுகிறது என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும்.
நீங்கள் தான் இந்த ஆட்டங்களை வென்றீர்கள் என்று என்னால் கூற முடியவில்லை. ரசிகர்களின் பிரார்த்தனை மற்றும் கடவுளின் அருளால் தான் நீங்கள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளீர்கள்.
வெளிப்புற காரணிகளால் தான் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை கொண்டுவரப்பட்டுள்ளது, திறமையின் அடிப்படையில் இல்லை. பாகிஸ்தான் அணி தங்களது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வாழ முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
அமீர் சோஹைலின் இந்த குற்றச்சாட்டுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் தனது கருத்துகளில் இருந்து திடீரென பல்டி அடித்துள் ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ப்ராஸ் அகமது தனது செயல்திறனை அர்ப்பணிக்க மறுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக ஜாவித் மியாண்தத் கடுமையாக விமர்சித்ததாகவும் கூறப்பட்டது.
இதன் அடிப்படையிலேயே நான் கருத்து தெரிவித்தேன். இந்த வெற்றிகளுக்கு காரணமானவர்கள் யார் என்று கூறமுடியாது என்றுதான் கூறினேன். ஆட்டத்தில் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதாகவோ அல்லது எந்தவிதமான விதி மீறல் நடந்தாக நான் கூறவில்லை. எனது கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT