Published : 23 Sep 2018 07:04 PM
Last Updated : 23 Sep 2018 07:04 PM

ஒருநாள் போட்டி பவர் பிளேயில் முதன் முதலாக விக்கெட் வீழ்த்திய சாஹல்: 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்

துபாயில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் பிட்சிலும் பாகிஸ்தான் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

தற்போது ஷோயப் மாலிக் பிரமாதமாக ஆடி வருகிறார் பாகிஸ்தான் 108/3. (28 ஓவர்கள்)

முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமார் மிகத் துல்லியமாக வீசி பகார் ஜமானையும், இமாம் உல் ஹக்கையும் திணற அடித்தனர். கவாஸ்கர் கூறியது போல் இந்த பேட்டிங் சாதக பிட்சில் கட்டுக்கோப்பான பந்து வீச்சே கட்டுப்படுத்தும். அதனை திறம்படச் செய்தனர்.

பும்ரா 6 ஓவர்களில் 1 மெய்டனுடன் 13 ரன்களை மட்டும் கொடுக்க, புவனேஷ்வர் 4 ஓவர்களில் 8 ரன்களே கொடுத்தார் இருவரும் 8 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தனர்.

சாஹல் பவர் பிளேவுக்குள் 8வது ஓவரே கொண்டு வரப்பட்டார். ரோஹித் சர்மாவின் இந்த கேப்டன்சி சாதுரியமானது, பயனளித்தது. இமாம் உல் ஹக் 10 ரன்களில் சாஹல் வீசிய பந்தை பிளிக் ஆட முயன்று தோற்றார் கால்காப்பில் பட எல்.பி.ஆனார். 10 ரன்களில் வெளியேறினார். ஒருநாள் போட்டிகளில் முதன் முதலாக பவர் பிளேவுக்குள் சாஹல் விக்கெட் எடுத்தார்.

பகார் ஜமான் 36 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை, பந்து வீச்சு அவ்வளவு துல்லியமாக அமைந்தது. கடைசியில் வெறுப்பாகி குல்தீப் யாதவ்வை ஸ்லாக் ஸ்வீப் ஆடி மிட்விக்கெட் மேல் மிகப்பெரிய சிக்சரை அடித்தார். பிறகு 15வது ஓவரில் இன்னொரு ஸ்லாக் ஸ்வீப் நான்கு ரன்களை எடுத்த ஜமான் குல்தீப் யாதவ் ஒரு பந்தை தூக்கி வீசி ஆசைக் காட்ட ஆட முயன்று பேலன்ஸ் தவறினார்.

பந்து கிளவ்வில் பட்டது தெரியாமல் எல்.பி.தீர்ப்பளித்தார் நடுவர் டக்கர். ரிவியூ செய்திருந்தால் தப்பித்திருக்கலாம் ஏனோ ரிவியூ செய்யாமல் சென்றார். 31 ரன்களில் அவர் வெளியேறினார். பாவம் நாட் அவுட்.

அடுத்ததாக பாகிஸ்தானின் பார்மில் உள்ள பாபர் ஆஸம் 9 ரன்களில் கேப்டன் சர்பராஸ் பாயிண்டில் தட்டி விட்டு பாபர் ஆஸமை சிங்கிளுக்கு இழுத்து விட்டு பிறகு திரும்பிப் போகச் சொன்னார், ஆனால் சாஹல் ஜடேஜாவுக்கு த்ரோவை செய்ய ரன் அவுட் ஆனார் பாபர் ஆஸம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x