Published : 06 Sep 2018 05:31 PM
Last Updated : 06 Sep 2018 05:31 PM

இந்திய ஸ்பின் பிட்ச்களில் அதிகம் வீசினாலும் பந்து வீச்சை இழக்காதவர்.. நான் இஷாந்த் சர்மாவின் விசிறியாகி ரொம்ப நாளாகி விட்டது: டேல் ஸ்டெய்ன் புகழாரம்

தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், தான் நீண்ட காலமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் விசிறியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ.டிவிக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

நான் இஷாந்த் சர்மாவின் மிகப்பெரிய விசிறியாகி நீண்ட நாட்கள் ஆகிறது. சன் ரைசர்ஸ் அணியில் அவருடன் ஆடியிருக்கிறேன். அவரால் என்ன முடியும் என்பதை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். இருந்தாலும் அவரைப் போன்ற திறமையாளர் தொடர்சியாக டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின் சாதக இந்தியப் பிட்ச்களில் வீசியும் தன் கவனத்தையும் பந்து வீச்சையும் இழக்காமல் இருக்கிறாரே,. மிகப்பெரிய விஷயம்.

இந்தியப் பிட்ச்களில் அதிகம் தொடர்ச்சியாக இந்திய அணி விளையாடும்போது இஷாந்த் சர்மா அணியில் வேகப்பந்து வீச்சாளராக அதிகம் வாய்ப்புகளை பெறாத போது ஸ்பின்னர்களை அதிகம் பயன்படுத்தும் போது கடினம்தான்.

ஆனாலும் இஷாந்த் சர்மா தன் கவனத்தைத் திருப்பவில்லை. இங்கிலாந்து தொடருக்கு முழு உடற்தகுதியுடன் வருகிறார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கான தேவை ஏற்படும் போது நிமிர்ந்து நிற்கிறார். கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆடி தானாகவே இந்தத் தொடருக்கு தயார் ஆனார்.

‘பும்ரா கடினமான வீச்சாளர்’

அதே போல் பும்ராவைப் பற்றிக் கூற வேண்டுமெனில் உலகில் எந்த பேட்ஸ்மென்களிடம் கேட்டாலும் பும்ராவை விளையாடுவது கடினம் என்றே கூறுவார்கள். விசித்திரமான பந்து வீச்சு முறை, ஓடி வந்து ஏகப்பட்ட வேகத்துடன் வீசுகிறார். நிறைய திறமைகள் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டியில் கீட்டன் ஜெனிங்சை வீழ்த்தியதைப் பார்த்தோமே. இரண்டு பந்துகள் வெளியே எழும்பிச் செல்ல ஒன்று அதே லெந்தில் உள்ளே வந்தது.

அவரிடம் வயது உள்ளது, வேகம் உள்ளது, திறமை உள்ளது.. வேறு என்ன வேண்டும்?

இவ்வாறு கூறினார் டேல் ஸ்டெய்ன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x