Published : 28 Sep 2014 02:02 PM
Last Updated : 28 Sep 2014 02:02 PM
இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இன்று மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
20 கிலோ மீட்டர் நடைப் போட்டி மகளிர் பிரிவில் இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த குஷ்பிர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 5-வது வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
20 கிலோ மீட்டர் நடைப்போட்டியில் பந்தய தூரத்தை குஷ்பிர் கவுர் ஒரு மணி 33 நிமிடம் 7 விநாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதலிடம் பிடித்த சீனாவின் லு சியூஷி 1:31:06 மணி நேரங்களில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். ஆகவே,2 நிமிட இடைவெளியில் தங்கம் கைவிட்டுப் போனது.
தேசிய அளவில் தான் படைத்திருந்த சாதனையை விட 30 விநாடிகள் குறைவான நேரத்தில் அவர் இலக்கை கடந்தார். முன்னதாக 2012-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜூனியர் பிரிவினருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் நடைப் பிரிவில் குஷ்பிர் கவுர் வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT