Published : 28 Sep 2018 03:23 PM
Last Updated : 28 Sep 2018 03:23 PM

இந்த ஆசியக் கோப்பையை நாங்கள் ஏற்கெனவே வென்று விட்டோம்: மஷ்ரபே மோர்டசா

இன்னும் 2 மணி நேரத்தில் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி இந்திய அணிக்கு எதிராகத் தொடங்கவுள்ள நிலையில் வங்கதேச கேப்டன் மோர்டசா போட்டிக்கு முந்தைய முதல்நாள் செய்தியாளர்கள் சந்திப்பில் வங்கதேச அணியின் வாய்ப்புகள் பற்றி பேசினார்.

“ஒவ்வொரு தொடருமே வித்தியாசமான பயணம். 2102 பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியாகட்டும். 2016-ல் இந்தியாவுக்கு எதிராகவாகட்டும் ஒவ்வொன்றும் வித்தியாசமே. ஒவ்வொரு முறையுன் கடினமான சூழ்நிலையை மீறி இறுதிக்குள் நுழைந்துள்ளோம்.

இந்தத் தொடரில் தமிம் இக்பாலை முதல் போட்டியிலேயே காயத்துக்கு இழந்தோம். ஷாகிப் இல்லை, முஷ்பிகுர் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் அதையும் மீறி அவர் ஆடியது அவரிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள ஏராளமாக இருப்பதாகவே உணர்கிறேன்.

இந்தியா நிச்சயம் சிறந்த அணி, நம்பர் 1 அணி, இங்கு கோப்பையை வெல்லும் அணியாக வந்துள்ளனர். ஆனால் நாம் எதுவும் கணிக்க முடியாது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மன உறுதியுடன் கடைசி பந்து வரை போராடுவோம். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

ஒவ்வொரு போட்டியிலும் கவலைதரும் தருணங்களை எதிர்கொண்டு மீண்டுள்ளோம், ஆப்கானுக்கு எதிராக இறுதிப் போட்டி போன்றுதான் இருந்தது. இந்த இறுதிப் போட்டியில் டாப் ஆர்டர் கிளிக் ஆகும் என்று நம்புகிறேன். இப்போது வந்து உத்தியெல்லாம் பற்றி சிந்தித்து பயனில்லை.

இந்தியாவை வீழ்த்த ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் ஒன்று பெரிய பவுலிங் தேவை, அல்லது ஒரு கிரேட் இன்னிங்ஸ் போதும் இந்தியாவை வீழ்த்தலாம். இதைத்தவிர இந்தியாவை வீழ்த்த எளிதான வழிமுறை கிடையாது. கோப்பை வங்கதேசத்துக்கு முக்கியமானதுதான் இன்ஷா அல்லா, ஒருநாள் வங்கதேசம் கோப்பையை வெல்லும் வங்கதேசம் வென்றால் இளைஞர்கள் உற்சாகம் பெறுவார்கள். என்னைப் பொறுத்தவரை உள்ளபடியே கூற வேண்டுமெனில் அன்று இலங்கைக்கு எதிராக கடைசியில் உடைந்த விரலுடன் தமீம் இக்பால் இறங்கிய தருணத்திலேயே ஆசியக் கோப்பையை நாங்கள் வென்று விட்டோம்.

இந்த இறுதிப் போட்டியை கிரிக்கெட் போட்டியாகப் பார்ப்போம், தருணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம்” இவ்வாறு கூறினார் மஷ்ரபே மோர்டஸா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x