Published : 18 Sep 2018 05:16 PM
Last Updated : 18 Sep 2018 05:16 PM
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது இந்திய அணி. கே.எல்.ராகுல் இல்லை, இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமட் அறிமுகப் போட்டியில் ஆடுகிறார்.
எதிர்பார்த்தது போல் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் ஆன்ஷி ராத் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஏற்கெனவே விராட் கோலி இல்லாததால் வருவாய் இல்லை என்று ஸ்டார் நிறுவனம் அங்கலாய்த்த நிலையில் இலங்கையும் சொதப்பி வெளியேற டிஆர்பி ரேட்டிங் போன்றவை கடுமையாக அடிவாங்கியுள்ளதால் இன்று ஹாங்காங் முதலில் பேட் செய்து சொதப்பலாக முடிந்து விட்டால் என்ன செய்வது?
அதனால் ஏதாவது ‘அறிவுறுத்தல்’ நிகழ்ந்திருக்கும் அதனடிப்படையில் இந்திய அணிக்கு ஒரு பேட்டிங் வார்ம் அப் முறையாக இருக்கட்டும் என்ற நோக்கில் முதலில் பேட் செய்ய இந்திய அணியை ஹாங்காங் கேப்டன் அழைத்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.
இந்திய அணி வருமாறு:
ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், சாஹல், கலீல் அகமட்.
ஹாங்காங் அணி:
நிஸகட் கான், அனுஷுமன் ராத் (கேப்டன்), பாபர் ஹயாத், கிறிஸ்டஃபர் கார்ட்டர், கிஞ்சித் ஷா, இசான் கான், அய்ஜாஜ் கான், ஸ்காட் மெகெச்னி (வி.கீ), தன்வீர் அஃப்சல், இசான் நவாஸ், நதீம் அகமட்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT