Published : 05 Sep 2018 08:26 PM
Last Updated : 05 Sep 2018 08:26 PM
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கோலியை நட்பு வட்டத்திலிருந்து ரோஹித் சர்மா நீக்கியது தற்போது நெட்டிசன்களிடையே விவாதப்பொருளாகியுள்ளது.
டிவிட்டர் மற்றும் இன்ஸ்டிராகிராம் பக்கங்களில் தமக்கு பிடித்தமான நபர்களை பின்தொடர்வது வழக்கம். கோலியை பின்தொடர்ந்து வந்த ரோஹித் சர்மா தற்போது நட்பு வட்டாரத்தில் இருந்து கோலியை நீக்கியுள்ளார். மேலும் கோலியை விமர்சனம் செய்து ரசிகர்கள் பதிவிட்டுள்ளதையும் ரோஹித் சர்மா லைக் செய்துள்ளார். இதனால் ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ரோஹித் சர்மாவைச் சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 12.4 மில்லியன்கள். ஆனால் அவர் ஒரு 46 பேரைத்தான் பின் தொடர்கிறார். இதில் விராட் கோலி இடம்பெற்றிருந்தார், தற்போது விராட் கோலியைப் பின் தொடர்வதை ரோஹித் சர்மா நிறுத்தியுள்ளதாக பரபரப்புச் செய்திகள் எழுந்துள்ளன.
இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவுக்கு 6.8 மில்லியன் ஃபாலோயர்கள். ஆனால் ரோஹித் சர்மா பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 84 மட்டுமே. இதிலும் கோலி இருந்தார், தற்போது இல்லை.
இதனையடுத்து நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகள்:
முஃபாதல் வோரா என்பவர், “ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர், தவல் குல்கர்னி, உள்ளிட்டோரை பின் தொடர்கிறார், ஆனால் கோலியை பின் தொடர போதிய இடமில்லை போலும். அதனால் கேப்டன் கோலியை அன் ஃபாலோ செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா: அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. கடைசியாக ஒருமுறை ஓவலில், ஆனால் அணி அவரை உட்கார வைக்க முடிவெடுத்தால் அதற்காக அவர் எதிர்ப்புக் காட்டக்கூடாது.
ஹர்ஷா போக்ளே: மிக மிக முதிர்ச்சியற்ற செயல்.
என்று சிலர் ரோஹித் சர்மாவை கண்டித்தாலும் சிலர் சமூக வலைத்தளத்தில் ஃபாலோ செய்வதும் அன் ஃபாலோ செய்வதும் அவ்வளவு பெரிய விஷயமா என்ற ரீதியிலும் பதிவிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT