Published : 26 Jun 2019 06:30 PM
Last Updated : 26 Jun 2019 06:30 PM
மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்ட் நகரில் நாளை நடக்கும் உலகக் கோப்பைலீக் ஆட்டத்தில் இந்தியாவை எதிர்த்து பலப்பரிட்சை நடத்துகிறது மே.இ.தீவுகள் அணி. இரு அணிகளும்கடந்த காலங்களில் மோதியுள்ள விவரம் குறித்த ஓர் பார்வை.
இந்தியாவும், மே.இ.தீவுகள் அணியும் உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை 8 முறை மோதியுள்ளனர்.
இதில் இந்திய அணி 5 முறையும் வெற்றியும், மே.இ.தீவுகள் அணி 3 முறையும் வென்றுள்ளன.
இந்திய அணி 1983-ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 34 ரன்களில் வென்றது.
1983-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி நடந்த உலகக்கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
1996-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி குவாலியரில் நடந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வாகை சூடியது.
2011, மார்ச் 20-ம் தேதி சென்னையி்ல நடந்த போட்டியில் மே.இ.தீவுகள் அணியை 80 ரன்களில் வீழ்தியது இந்திய அணி.
2015-ம் ஆண்டு , மார்ச் 6-ம் தேதி பெர்த்தில் நடந்த ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை 4 விக்கெட்டில் தோற்கடித்தது இந்திய அணி.
1979-ம் ஆண்டு, ஜூன்9-ம் தேதி பமிங்ஹம் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை 9 விக்கெட்டில் சாய்த்து மே.இ.தீவுகள் அணி.
1983-ம் ஆண்டு, ஜூன் 15ம் தேதி ஓவலில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணயை 66 ரன்களில் தோற்கடித்தது மே.இ.தீவுகள் அணி.
1992-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி வெலிங்டனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணியை 10 ரன்களில் வீழ்த்தியது மே.இ.தீவுகள் அணி.
கடந்த 1996-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து இந்திய அணியை, வெல்ல முடியாமல் ஏறக்குறைய 23 ஆண்டுகளாக போராடி வருகிறது மே.இ.தீவுகள் அணி.
1983-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில்தான் இரு அணிகளும் இருமுறை மோதின. ரவுண்ட் ராபின் முறையில் லீக் ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி. ஆனால், இறுதி ஆட்டத்தி்ல் மே.இ.தீவுகளை அதிர்ச்சித்த தோல்வி அடையச் செய்து கோப்பையை வென்றது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி.
மே.இ.தீவுகள் அணியுடன் இதுவரை 126 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 59 போட்டிகளில் இந்திய அணியும், 62 போட்டிகளில் மே.இ.தீவுகள் அணியும் வென்றுள்ளன. 2 போட்டிகள் சமனிலும், 3 போட்டிகள் முடிவின்றி கைவிடப்பட்டன. மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி 48.78 சதவீதம் வெற்றி வீதத்தை வைத்துள்ளது.
மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி இந்தூரில் நடந்த ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாகும். இந்த ஆட்டத்தில் சேவாக் 219 ரன்கள் சேர்த்தார் என்பது நினைருவிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT