Published : 19 Sep 2014 11:01 AM
Last Updated : 19 Sep 2014 11:01 AM
ஆண்ட்ரே ரஸல், ரியான் டென் தஸ்சாத்தே ஆகியோர் ஆடிய விதம் வியப்பாக இருக்கிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பி யன்ஸ் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியா சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது கொல்கத்தா. இதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது.
பின்னர் பேட் செய்த கொல்கத்தா அணி 51 ரன்களுக்கு 5 விக்கெட்டு களை இழந்து தடுமாறியபோது களமிறங்கிய டென் தஸ்சாத்தேவும், ரஸலும் அதிரடியாக ஆடி 19 ஓவர்களில் வெற்றி தேடித்தந்தனர். ரஸல் 25 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தஸ்சாத்தே 41 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டிக்குப் பிறகு பேசிய கம்பீர், “ரஸலும், தஸ்சாத்தேவும் ஆடிய விதத்தை என்னால் நம்பவே முடியவில்லை. அதேநேரத்தில் இங்கே சுநீல் நரேனையும் குறிப்பிட்டாக வேண்டும். வெற்றியில் அவருக்கும் முக்கியப் பங்கு உண்டு. 4 ஓவர்களை வீசிய அவர் 9 ரன்களை மட்டுமே கொடுத்து சூப்பர் கிங்ஸை கட்டுப்படுத்தினார். சாம்பியன்ஸ் லீக்கில் இதுவரை நாங்கள் சாம்பியன் ஆகவில்லை. இந்த முறை சாம்பியனாகிவிட வேண்டும் என்பதில் அனைத்து வீரர்களும் தீவிரமாக உள்ளனர்.
முதல் 15 ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசினோம். ஆனால் அதன்பிறகு ரன்களை வழங்கிவிட்டோம். நாங்கள் நினைத்திருந்தால் சூப்பர் கிங்ஸை குறைவான ரன்களுக்குள் சுருட்டி யிருக்கலாம் என்று நினைக்கிறேன். அதேபோல் நாங்கள் பேட் செய்தபோது சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் இரண்டு நல்ல ஓவர்கள் கிடைத்துவிட்டால் போட்டியின் முடிவை மாற்றிவிடலாம் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்.
தோல்வி குறித்துப் பேசிய தோனி, “எதிரணிக்கு சவால் அளிக் கக்கூடிய அளவுக்கு நாங்கள் ரன் சேர்க்கவில்லை என நினைக் கிறேன். கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்து வீசினர். 160 ரன்கள் குவித்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. எனினும் எங்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீ சினார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT