Last Updated : 18 Mar, 2018 06:20 PM

 

Published : 18 Mar 2018 06:20 PM
Last Updated : 18 Mar 2018 06:20 PM

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி ‘ஸ்ட்ரைக் ரேட்’ வைத்திருக்கும் நடப்பு வீரர் யார் தெரியுமா?

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சமீப காலமாக ரோஹித் சர்மா சில அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார், விரட்டல் ஸ்பெஷலிஸ்ட் விராட் கோலி உள்ளார், ஆஸி.யில் வார்னர், தென் ஆப்பிரிக்காவில் குவிண்டன் டி காக், ஏரோன் பிஞ்ச் ஆகியோர் இருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட்டில் இவர்களில் யாரும் நடப்பு வீரர்களில் முன்னிலை வகிக்கவில்லை.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் குறைந்தது 2000 ரன்கள் எடுத்த வீரர்கள் என்ற அளவுகோலை வைத்துக் கொண்டால் ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 2059 ரன்களை 123.08 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார், எனவே இவர்தான் நம்பர் 1. டி20-சர்வதேச கிரிகெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 165.08 என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்தபடியாக ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்தது 2000 ரன்கள் என்ற அளவுகோலின்படிப் பார்த்தால் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், இவரது ஸ்ட்ரைக் ரேட் 2,816 ரன்களுக்கு 118.02 ஆகும். டி20யில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 134.

2015 முதல் அதிகாரபூர்வ ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இறங்காத மே.இ.தீவுகளின் ஆந்த்ரே ரஸல் 985 ரன்களை 130.81 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

அளவுகோலை 3,000 ஒருநாள் சர்வதேச ரன்களாக்கினால் ஷாகித் அஃப்ரீடி தன் 8064 ஒருநாள் போட்டி ரன்களை எடுக்க 117 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இவருக்குப் பின்னால் இதே அளவுகோலில் விரேந்திர சேவாக் 8273 ரன்களை 104.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

ஜேசன் ராய் 2006 ரன்களை 102.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் டேவிட் மில்லர் 2503 ரன்களை 101.13 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஏ.பி.டிவில்லியர்ஸ் 9577 ரன்களை 101.09 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x