Published : 24 Sep 2014 02:41 PM
Last Updated : 24 Sep 2014 02:41 PM

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாமுயெல்ஸ், டிவைன் ஸ்மித்

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிராக இங்கு 5 ஒருநாள் போட்டிகள கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதற்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வீரர்கள் கொண்ட பட்டியலில் மர்லான் சாமுயெல்ஸ், டிவைன் ஸ்மித், வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான லியான் ஜான்சன் என்ற கயானா பேட்ஸ்மெனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கிறிஸ் கெய்ல் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

கிர்க் எட்வர்ட்ஸ், மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நிகிடா மில்லர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.

வேகப்பந்து வீச்சாளரும் பின்னால் களமிறங்கி பேட்டிங்கில் பவர் ஹிட்டிங் செய்யக் கூடிய ஜெரோம் டெய்லர் கடைசியாக 2010ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் ஆடினார். அதன் பிறகு தொடர் காயம் காரணமாக அவர் விளையாட முடியவில்லை.

முதல் ஒருநாள் போட்டி கொச்சியில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:

டிவைன் பிராவோ (கேப்டன்), டேரன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், லியான் ஜான்சன், சுனில் நரைன், கெய்ரன் பொலார்ட், தினேஷ் ராம்தின் (வி.கீ), ரவி ராம்பால், கிமார் ரோச், ஆந்த்ரே ரசல், டேரன் சமி, மர்லான் சாமுயெல்ஸ், லெண்டில் சிம்மன்ஸ், டிவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x