Published : 09 Mar 2018 03:05 PM
Last Updated : 09 Mar 2018 03:05 PM
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது கொலை முயற்சி, பலாத்காரம் ஆகிய பிரிவுகளில் அவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கொல்கத்தா போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவரின் மனைவி ஹசின் ஜஹான். ஷமியின் மனைவி ஜஹான் கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸிடம் பரபரப்பு புகார் அளித்தார். அதில் முகமது ஷமியும், அவரின் சகோதரரும், உறவினர்களும் சேர்ந்து தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும் புகார் அளித்தார். மேலும், முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முகமது ஷமி மறுத்தார். தனது மனைவி மனநிலை பாதித்துவிட்டார் என்றும் தான் யாருடனும் சேர்ந்து மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் போலீஸ் நிலையத்தில் ஹசின் ஜஹான் அளித்த புகாரின் அடிப்படையில், முகமது ஷமி மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
முகமது ஷமி மீது கொலை முயற்சி ஐபிசி 307, குடும்ப வன்முறை 498ஏ, குற்றச்சதி 506, காயப்படுத்துதல் 328, பலாத்காரம் 376, பிரிவு 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குப் பதிவில் முகமது ஷமியின் மூத்த சகோதரரர் ஹசிப் அகமது, மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 4 பேரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை கிடைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT