Published : 08 May 2019 04:53 PM
Last Updated : 08 May 2019 04:53 PM

ஐபிஎல் கோப்பையை வெல்லப்போவது யார்? - இஷாந்த் சர்மா உறுதியில் தெரியும் சூட்சுமம்

ஐபிஎல் போட்டித்தொடர் பிளே ஆஃப் சுற்றில் இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்த்து டெல்லி கேப்பிடல்ஸ் விளையாடுகிறது. இதில் தோற்கும் அணி வீட்டுக்குச் செல்ல வேண்டியதுதான்.

 

வெற்றி பெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத வேண்டியிருக்கும்.

 

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் பற்றி பலவிதமான ஹேஷ்யங்களும் கணிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று சிஎஸ்கே ஒரு பிராண்ட் அது ஒரே போட்டியில் ஐபிஎல் இறுதிக்குச் சென்றால் அது வணிக நலன்களுக்கு தோதாக இருக்காது, ஆகவே அது 2 பிளே ஆஃப் சுற்றுகளில் ஆட வேண்டும்.. இது வணிக விதி என்று ஒருசாரார் பேசுவதைக் கேட்க முடிகிறது. அதனால்தான் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தோல்வி என்று ரசிகர்கள் தரப்பில் ஒரு சிலர் இவ்வாறு ஒரு வணிகப்பார்வை கொடுக்கின்றனர்.

 

மேலும் சிலர் மும்பை, சென்னை இறுதிப்போட்டிதான் இதே வணிக நோக்கிலிருந்தும் சிறந்தது இரு அணிகளும் இறுதியில் மோதி கடைசியில் மும்பை கோப்பையை வெல்லும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.

 

இன்னும் சில தரப்பினர் எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்தான் என்றால் ஐபிஎல் போட்டிகள் ஒரு கணிக்கக் கூடிய நிலைக்குச் சென்று விடும் இதனால் அதன் வணிக பிராண்டுக்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்படலாம் ஆகவே இந்த முறை டெல்லி கேப்பிடல்ஸ் வெல்லும் என்று ஒரு சாரார் வணிக நோக்கிலேயே புதிய கோணத்தை வெளிப்படுதுவதையும் கேட்க முடிகிறது.

 

பொதுவாக டெல்லி கேப்பிடல்ஸ் வெல்ல வேண்டும் என்று அதிகம் பேர் கருதுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.

 

இந்நிலையில் இஷாந்த் சர்மா, ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ நேர்காணலில் பல விஷயங்களைப் பேசி விட்டு கடைசியாக ஒரு கேள்விக்கு, அதாவது நடப்பு ஐபிஎல் போட்டித் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் உங்கள் குறிக்கோள் என்ன என்ற கேள்விக்குப் பதில் அளித்த இஷாந்த் சர்மா,

 

“ஒரேயொரு குறிக்கோள்தான் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும். வெற்றி பெறுவோம். நிச்சயம் நாங்கள் வெல்வோம் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஏன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் என்னவோ அப்படித்தான் நம்புகிறேன்” என்று கூறியது பலகோணங்களையும் நம்மை சிந்திக்க அழைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x