Published : 02 Sep 2014 02:35 PM
Last Updated : 02 Sep 2014 02:35 PM

வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டேயிற்கு கிளென் மெக்ராவிடம் சிறப்புப் பயிற்சி

வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாடமியில் கிளென் மெக்ராவிடம் தனது 10 நாட்கள் சிறப்புப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.

பிசிசிஐ-எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாடமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள சிறப்பு ஒப்பந்தத்தின் படி நாட்டில் உள்ள புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராவிடம் சிறப்புப் பயிற்சி பெறுகின்றனர்.

வருண் ஆரோன், ஈஷ்வர் பாண்டே, மற்றும் அசோக் டிண்டா ஆகியோர் இந்தப் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களில் அடங்குவர்.

டெனிஸ் லில்லிக்குப் பிறகு எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாடமியின் இயக்குனாராக பொறுப்பேற்ற கிளென் மெக்ரா, ஈஷ்வர் பாண்டே இந்தியாவில் தற்போது உள்ள சிறந்த ஸ்விங் பவுலர் என்று கூறியுள்ளார்.

வருண் ஆரோன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசும் முயற்சியுடன் கிளென் மெக்ராவிடம் 10 நாட்கள் பயிற்சியை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.

அசோக் டிண்டா ஒற்றைப் பரிமாண பவுலராக இருந்து வருகிறார், ஆகவே அவரது பந்து வீச்சையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்த கிளென் மெக்ராவிடம் பயிற்சி பெறுகிறார்.

இவர்கள் தவிர மும்பையின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், மற்றும் ராஜஸ்தானின் தீபக் சாஹர் ஆகியோரும் பயிற்சி பெறுகின்றனர். சாஹர் ரஞ்சி டிராபியில் தனது அறிமுகப் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக 10 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஆனால் அதன் பிறகு ஃபார்ம் இழந்து காயமடைந்து காணாமல் போனார்.

மேலும் ஜார்கண்ட் வேகப்பந்து வீச்சாளர் ராகுல் சுக்லா, ரயில்வே அணியின் அனுரீத் சிங், இந்தியா அண்டர்-19 பவுலர் சாமா மிலிந்த், வங்காள அணியின் வீர் பிரதாப் சிங், உ.பி. பவுலர் அன்கீட் ராஜ்புத் ஆகியோரும் பயிற்சி பெறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x