Published : 09 May 2019 12:07 PM
Last Updated : 09 May 2019 12:07 PM
2019 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு என்னவென்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கபில் தேவ் கூறியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதாவது:
இந்திய அணியில் இளைஞர்களின் சக்தியும், அனுபவமும் உள்ளது. ஒருவகையில் இந்திய அணியினர் மற்ற அணியினரைவிடவும் அதிகமான அனுபவம் கொண்டவர்கள். இந்திய அணியில் ஒரு சமநிலை இருக்கிறது. அணியில் 4 பாஸ்ட் பவுலர்கள் மூன்று ஸ்பின்னர்கள், விராட் கோலி, எம்.எஸ்.தோனி என்ற இரு பெரும் ஈடு இணையற்ற ஆளுமைகள் உள்ளனர்.
இங்கிலாந்து மண்ணின் தன்மை ஃபாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமாக அமையும். முகமது ஷமி, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மணிக்கு 145 கி.மீ. என்ற வேகத்திறனுக்கு ஈடாக பந்தை சுழற்ற முடியும்.
தோனியும் கோலியும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். இப்போதிருக்கும் அணியின் அடிப்படையில் நிச்சயமாக நாம் அரையிறுதிக்குள் நுழைந்துவிடுவோம். டாப் 4 பட்டியலில் நிச்சயம் இந்தியா இடம்பெற்றுவிடும்.
ஆனால், அதன் பின்னர்தான் மிகவும் கடினமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அந்த வேளையில் கொஞ்சம் அதிர்ஷ்டமும், அத்துடன் ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட திறனும் குழுவின் ஒட்டுமொத்த திறனும் சேர்ந்தே அடுத்த கட்டத்துக்கான முன்னேற்றத்தை நிர்ணயிக்கும்.
ஹர்திக் பாண்டியா மீது எவ்வித அழுத்தத்தையும் செலுத்தக்கூடாது. அவருக்கு போதமான திறன் இருக்கிறது. அவர் தனது சொந்த பாணியில் இயல்பாக விளையாடட்டும். எந்த வீரரையும் இன்னொரு வீரருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நான் ஊக்குவிக்க மாட்டேன். அப்படி ஒப்பீடு செய்தால் அது வீரர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்கும்.
இவ்வாறு கபில்தேவ் தெரிவித்துள்ளதாக ஐசிசி குறிப்பிட்டுள்ளது.
உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்:
விராட் கோலி
ரோகித் சர்மா
ஷிகார் தவான்
கே.எல்.ராகுக்
விஜய் சங்கர்
எம்.எஸ்.தோனி
கேதர் ஜாதவ்
தினேஷ் கார்த்திக்
யுவேந்திரா சாஹல்
குல்தீப் யாதவ்
புவனேஸ்வர் குமார்
பும்ரா
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
முகமது ஷமி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT