Published : 03 May 2019 03:12 PM
Last Updated : 03 May 2019 03:12 PM
12-வது ஐபிஎல் போட்டியில் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றுள்ளநிலையில், மீதமுள்ள ஒரு இடத்துக்கு 4 அணிகளிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
சிஎஸ்கே அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மும்பை அணியும், டெல்லி அணியும் தலா 16 புள்ளிகளுடன் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன. இன்னும் ஒரு இடம் மட்டுமே இருக்கிறது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏறக்குறைய வெளியேறிவிட்டதாக வைத்துக்கொண்டால், கேகேஆர் அணி, சன்ரைசர்ஸ் அணி, கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. இந்த 3 அணிகளில் அடுத்த இரு நாட்களில் யாருக்கு ப்ளே-ஆஃப் வாய்ப்பு கிடைக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஆர்சிபி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறிவிட்டது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 புள்ளிகளுடன் இன்னும் ஒரு போட்டியை எதிர் நோக்கி இருக்கிறது. நாளை டெல்லி அணியுடன் நடக்கும் போட்டியில் வென்றால்கூட ராஜஸ்தான் நிலை திண்டாட்டம்தான்.
ப்ளே-ஆஃப் சுற்றுக்கு போட்டியிடும் கேகேஆர், பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் இந்த அணிகளுக்கு 2 ஆட்டங்கள் மட்டுமே மீதம் இருக்கின்றன.இந்த ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் கண்டிப்பாக, நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
குறிப்பாக மொஹாலியில் இன்று நடக்கும் போட்டியில், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியை, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன. இதில் எந்த அணி வெல்கிறதோ அந்த அணி ப்ளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தும்.
அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | டை | முடிவு இல்லை | புள்ளி | ரன் ரேட் |
சிஎஸ்கே | 13 | 9 | 4 |
|
| 18 | 0.209 |
மும்பை | 13 | 8 | 5 |
|
| 16 | 0.321 |
டெல்லி | 13 | 8 | 5 |
|
| 14 | -0.096 |
சன்ரைசர்ஸ் | 13 | 6 | 7 |
|
| 12 | +0.653 |
ராஜஸ்தான் | 13 | 5 | 7 |
| 1 | 11 | -0.321 |
கேகேஆர் | 12 | 5 | 7 |
|
| 10 | +0.10 |
பஞ்சாப் | 13 | 5 | 7 |
|
| 10 | -0.296 |
ஆர்சிபி | 13 | 4 | 8 |
| 1 | 9 | -0.694 |
யார் யாருடன் தோற்க வேண்டும்?
சன்ரைசர்ஸ் அணி
சன்ரைசர்ஸ் அணி இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றிகளையும் 7 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு 12 புள்ளிகளுடன் உள்ளது. ஆர்சிபி அணியுடன் பெங்களூருவில் நாளை நடக்கும் ஒரு போட்டி மட்டுமே இருக்கிறது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியை கண்டிப்பாக நல்ல ரன் ரேட்டில் வெல்ல வென்றால்தான், மற்ற அணிகள் 14 புள்ளிகள் பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் வாய்ப்பைப் பெற முடியும்.
ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி தோற்றால் ப்ளே-ஆப் சுற்றுக்கு வாய்ப்பு உண்டா ? என்றால் அதற்கும் வாய்ப்பு உண்டு. அதற்கு சில தோல்விகள் நிகழ வேண்டும். என்னவென்றால், இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் கேகேஆர் வென்று, ஞாயிற்றுக்கிழமை மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் தோற்க வேண்டும்.
மேலும், இன்று நடக்கும் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி தோற்று, சிஎஸ்கே அணியுடன் வெல்ல வேண்டும். இவை நடந்தால், சன்ரைசர்ஸ், கேகேஆர், கிங்ஸ்லெவன்பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் ஒரே நிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் பார்க்கும் போது சன்ரைசர்ஸ் அணி நல்ல நிலையில் இருந்தால், ப்ளே-ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு.
கிங்ஸ்லெவன் அணி:
கிங்ஸ்லெவன் அணிக்கு இன்று கேகேஆர் அணியுடன் நடக்கும் போட்டியும், நாளைமறுநாள் சிஎஸ்கே அணியுடனான போட்டியும் மிகவும் கடினமானவை. ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் தோற்று, நாளைமறுநாள் ஆடும் ஆட்டத்தில் சிஎஸ்கே விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் வென்றால், 12 புள்ளிகளுடன் இருக்கும். அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியும் மீதமிருக்கும் ஒருபோட்டியில் தோற்க வேண்டும், கேகேஆர் அணி ஒரு வெற்றி ஒரு தோல்வி என்ற நிலையில் 12 புள்ளிகள் பெற வேண்டும். அவ்வாறு இருந்தால், ரன்ரேட் முடிவு செய்யும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கேகேஆர் அணி அடுத்து வரும் 2 ஆட்டங்களிலும் நல்ல ரேட் அடிப்படையில் வெல்வதுதான் ப்ளே-ஆஃப் வாய்ப்பில் பாதுகாப்பாக இடம் பெற முடியும். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ்லெவன்பஞ்சாப் அணியிடம் கேகேஆர் அணி தோற்றால், நாளை மறுநாள் நடக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் வெல்ல வேண்டும்.
அவ்வாறு வெல்லும்போது, சன்ரைசர்ஸ் அணியும் தோற்றிருக்க வேண்டும், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, சிஎஸ்கே அணியிடம் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், கேகேஆர், சன்ரைசர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் இருந்து ரன் ரேட் அடிப்படையில் ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT