Last Updated : 13 Apr, 2019 12:24 PM

 

Published : 13 Apr 2019 12:24 PM
Last Updated : 13 Apr 2019 12:24 PM

தோற்றது பரவாயில்லை, எதிரணியில் கங்குலி இருந்தாரே: ஷாருக்கான்

தோற்றது பரவாயில்லை, எதிரணியில் கங்குலி இருந்தாரே என்று கொல்கத்தா அணி தோல்வி குறித்து ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் நேற்று (ஏப்ரல் 12) கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி மோதின. இதில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. 179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷிகர் தவணின் பவுண்டரி மழை, ரிஷப் பந்தின் நிதான ஆட்டம் ஆகியவற்றால் டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி மூலம் 7 போட்டிகளில் 3 தோல்வி 4 வெற்றி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் முன்னேறியுள்ளது. கடந்த 11 ஐபிஎல் சீசன்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி லீக் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டுவருவது இதுதான் முதல் முறையாகும்.

கொல்கத்தா அணியின் தோல்வி குறித்து உரிமையாளரும், இந்தி திரையுலகின் நட்சத்திர நடிகருமான ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஷுப்மன் கில் மற்றும் ரஸ்ஸல் மீண்டும் அருமையாக ஆடினார்கள். தோற்றது பரவாயில்லை. ஆனால் இன்று மனதளவில் நாம் அவ்வளவாக முயற்சிக்கவில்லை. முக்கியமாக பந்துவீச்சில். அது வருத்தம் தருகிறது. இன்று நடந்த ஒரே நல்ல விஷயம், ஈடன் கார்டன் மைதானத்தில் நம் தாதா கங்குலி, வெற்றி பெற்ற அணியில் இருந்தார் என்பதுதான். வாழ்த்துகள் டெல்லி கேபிடல்ஸ்

இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x