Last Updated : 27 Apr, 2019 08:23 AM

 

Published : 27 Apr 2019 08:23 AM
Last Updated : 27 Apr 2019 08:23 AM

தோனி இல்லாத சிஎஸ்கே மீண்டும் தோல்வி; 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது

ஐபிஎல் டி 20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட் டத்தில் தோனி இல்லாமல் களமி றங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதா னத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தோனி, ஜடேஜா ஆகியோர் காய்ச்சல் காரணமாக களமிறங்கவில்லை. அதேவேளை யில் டு பிளெஸ்ஸிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இவர் களுக்குப் பதிலாக முரளி விஜய், மிட்செல் சாண்ட்னர், துருவ் ஷோரே களமிறங்கினர். தோனி களமிறங் காததால் சுரேஷ் ரெய்னா, சென்னை அணியை வழிநடத்தினார்.

மும்பை அணியில் இரு மாற்றங் கள் இருந்தது. பென் கட்டிங், மயங்க் மார்க்கண்டே ஆகியோருக்கு பதிலாக எவின் லீவிஸ், அனுகுல் ராய் களமிறக்கப்பட்டனர். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.

தீபக் ஷகார் வீசிய 3-வது ஓவரின் முதல் இரு பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டிய குயிண்டன் டி காக் (15), 4-வது பந்தில் விக்கெட் கீப்பர் அம்பதி ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதை யடுத்து எவின் லீவிஸ் களமிறங் கினார்.

தீபக் ஷகார் வீசிய அடுத்த ஓவரில் எவின் லீவிஸ் இரு பவுண்டரிகளையும், ரோஹித் சர்மா ஒரு பவுண்டரியும் விரட்ட இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஹர்பஜன் சிங் வீசிய 8-வது ஓவரில் டீப் மிட்விக்கெட் மற்றும் லாங் ஆன் திசையில் தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ரோஹித் சர்மா.

இம்ரன் தகிர் வீசிய 9-வது ஓவரில் எவின் லீவிஸ் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். 10 ஓவர்களில் மும்பை அணி 84 ரன்கள் சேர்த்தது. எவின் லீவிஸ் 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் சாண்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ரோஹித் சர்மாவுடன் இணைந்து 2-வது விக் கெட்டுக்கு எவின் லீவிஸ் 75 ரன்கள் சேர்த்தார். சீராக ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா 37 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஐபிஎல் தொடரில் இது அவரது 35-வது அரை சதமாக அமைந்தது. இம்ரன் தகிர் வீசிய 14-வது ஓவரில் கிருணல் பாண்டியா (1) வெளியேறினார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்க இம்ரன் தகிர் வீசிய 16-வது ஓவரில் ரோஹித் சர்மா இரு பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாசினார். சாண்ட்னர் வீசிய 17-வது ஓவரின் 2-வது பந்தை ரோஹித் சர்மா, லாங் ஆன் திசையில் விளாசிய போது முரளி விஜய்யிடம் கேட்ச் ஆனது.

ரோஹித் சர்மா 48 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்தார். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில், தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 23 ரன்களும் கெய்ரன் பொலார்டு 12 பந்துகளில், 13 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை அணி சார்பில் மிட்செல் சாண்ட்னர் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டும் வழங்கிய நிலையில் 2 விக்கெட்களை வீழ்த்தினார். 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மலிங்கா வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்டிய வாட்சன் (8), 5-வது பந்தை ஷார்ட் ஃபைன் திசையில் நின்ற ராகுல் ஷகாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் சீரான இடைவெளியில் சென்னை அணி விக்கெட்களை இழந்தது. ஹர்திக் பாண்டியா பந்தை பாயிண்ட் திசையில் தூக்கி அடித்து சுரேஷ் ரெய்னா (2), நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்காத நிலையிலும், கேதார் ஜாதவ் 6 ரன்களிலும் கிருணல் பாண்டியா பந்தில் போல்டானார்கள்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய துருவ் ஷோரே (5), அனுகுல் ராய் பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க ராகுல் ஷகாரிடம் கேட்ச் ஆனது. சற்று நிலைத்து நின்று விளையாடிய தொடக்க வீரரான முரளி விஜய் 35 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்தில், பாயிண்ட் திசையில் நின்ற சூர்யகுமார் யாதவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

11.4 ஓவர்களில் 66 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த சென்னை அணி அதன் பின்னர் மீள முடியாமல் போனது. டுவைன் பிராவோ 20, தீபக் ஷகார் 0, ஹர்பஜன் சிங் 1, மிட்செல் சாண்ட்னர் 22 ரன்களில் நடையை கட்ட 17.4 ஓவர்களில் சென்னை அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

மும்பை அணி தரப்பில் மலிங்கா 4 விக்கெட்களையும் கிருணல் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி தொடரில் 7-வது வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. தோனி இல்லாமல் களமிறங்கிய சென்னை அணி 4-வது தோல்வியை பெற்றது. கடந்த 17-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்திலும் தோனி இல்லாமல் களமிறங்கிய சென்னை அணி படுதோல்வி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x