Published : 07 Apr 2019 10:57 AM
Last Updated : 07 Apr 2019 10:57 AM

‘நான் கேப்டன் கூல்தான்... ஆனால் அவ்வளவு கூல் இல்ல’: தீபக் சாஹரைக் கடுப்படித்த தோனி

இந்திய அணிக்கு ஆடும்போது தோனி கடைபிடிக்கும் ‘கூல்’ அணுகுமுறை சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஆடும்போது அவரிடம் எதிர்பார்க்க முடியாது. சமயங்களில் உக்கிரமாகவே இருப்பார்.

 

இருந்தாலும் கோலி அளவுக்கு ‘வெறும் பாடி லாங்குவேஜ்’ அல்ல தோனி, அவர் கூலை இழந்தார் என்றால் அதன் பின்னணியில் உண்மையான காரணங்கள் இருக்கும்.

 

நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோற்ற போட்டியில் அதிரடி மன்னன் டேவிட் மில்லர் ஒரு முனையில் நிற்க, செட்டில்டு பேட்ஸ்மென் சர்பராஸ் கான் 19வது ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்தார்.

 

பிராவோ இல்லாததால் 19வது ஓவரில் தீபக் சாஹரைத்தான் தோனி பயன்படுத்த வேண்டிய நிலை. கிங்ஸ் லெவன் கடும் நெருக்கடியிலிருந்து மீள தீபக் சாஹரை இலக்காக்கும் முயற்சியில் இருந்தது.

 

அப்போது கொஞ்சம் பதற்றத்துடன் காணப்பட்ட தீபக் சாஹர் முதல் பந்தை இடுப்புக்கு மேல் நல்ல அறை வாங்கும் புல்டாஸ் ஒன்றை வீச சர்பராஸ் கான் அதனை முறையாக பவுண்டரி அடித்தார், நோ-பால் ஆக ஃப்ரீ ஹிட் கிடைத்தது, ஃப்ரீ ஹிட் பந்தும் மீண்டும் ஒரு உயர புல்டாஸ் மீண்டும் நோ-பால், ஆனால் இம்முறை 2 ரன்கள் வந்தது அதாவது பந்து கணக்கிற்கு வராமலேயே 6 ரன்கள் வந்து விட்டது.

 

விக்கெட் கீப்பராக இருந்த தோனி கொஞ்சம் கூல் தன்மையை இழந்து விட்டார்.  நேராக சாஹர் வீசும் முனைக்கே வந்து விட்டார் தோனி, ’என்ன ஆச்சு? ஏன் இப்படி போடற? என்ற பாவனையில் அவர் பேசியது போல் தெரிந்தது. வெலவெலத்துப் போன சாஹர் ஏதோ விளக்கம் அளிக்க முயன்றார், ஆனால் அவரிடம் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே சில அறிவுரைகளை கொடுத்தார் தோனி.

 

அதன் பிறகு அற்புதமாக வீசினார் சாஹர்.  தோனி, தீபக் சாஹரிடம் பேசிய அந்த வீடியோ, புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x