Published : 07 Apr 2019 04:34 PM
Last Updated : 07 Apr 2019 04:34 PM
கோல் போஸ்ட்களுக்கிடையே நரைத்த தலையுடன் ஆனால் சுறுசுறுப்பாக ஓர் உருவம் இங்கேயும் அங்கேயும் நகர்ந்து கொண்டிருந்தது. அந்த உருவம்தான் இஸ்ரேலின் ஐசக் ஹயீக்.
உலகிலேயே தொழில்பூர்வ கால்பந்து போட்டி ஒன்றில் ஆடிய 73 வயது முதிய வீரர் என்ற உலக சாதனையை வெள்ளியன்று நிகழ்த்தினார் ஐசக் ஹயீக். இவர் அடுத்த வாரம் தன் 74வது பிறந்த தினத்தைக் கொண்டாடவிருக்கிறார்.
இவர் வெள்ளியன்று இஸ்ரேல் தொழில்பூர்வ கால்பந்து கிளப் போட்டி ஒன்றில் சீரியஸாக கோல் கீப்பராக விளையாடி அசத்தியுள்ளார். இரோனி ஒர் யெஹுதா சாக்கர் கிளப் ஆகும் அது.
இவர் பிறந்த ஊர் இராக். இந்நிலையில் கின்னஸ் உலக சாதனை பிரதிநிதிகள் இவரை அடையாளம் கண்டு கொண்டு இவரது சாதனையை உலக சாதனையாக கின்னஸ் சாதனையில் சேர்த்தது.
இவரது அணி மெக்கபி ரமத் கன் அணியிடம் 5-1 என்ற கோல் கணக்கில் தோற்றாலும் இவர் சில கோல்களையும் தடுத்துள்ளார்.
“இன்னொரு போட்டியிலும் ஆடுவேன்” என்று கூறும் இந்த இரும்பு முதியவர் , “இது எனக்கு மட்டும் பெருமையல்ல, இஸ்ரேல் விளையாட்டுதுறைக்கே பெருமை” என்றார்.
இராக்கில் பிறந்த இவர் தன் 4 வயதிலேயே பெற்றோருடன் இஸ்ரேல் வந்து விட்டார். இவருக்கு முன்னால் உருகுவேயைச் சேர்ந்த கால்பந்து வீரர் ராபர்ட் கர்மோனா என்ற வீரர் 53 வயதில் தொழில்பூர்வ கால்பந்து போட்டியில் விளையாடியதே முந்தைய கின்னஸ் உலக சாதனையாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT