Published : 23 Sep 2014 03:34 PM
Last Updated : 23 Sep 2014 03:34 PM
பெங்களூருவில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டால்பின்ஸ் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் 20 ஓவர்களில் 242 ரன்கள் குவித்தது. 11வது முறையாக டி20 கிரிக்கெட்டில் ஸ்கோர் 240 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு இலங்கையின் நான்டிஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி ஸ்ரீலங்கா ஏர் எஸ்.சி அணிக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட்டில் 245 ரன்களைக் குவித்தது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணி 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கென்யாவுக்கு எதிராக 260 ரன்களைக் குவித்தது. இதுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டி20-யில் ஒரு அணி எடுக்கும் அதிகபட்ச ஸ்கோராகும்.
சமீபமாக 29, ஆகஸ்ட் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு எதிராக சவுதாம்ப்டனில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது.
ஒட்டுமொத்தமாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே டி20 கிரிக்கெட்டில் 20 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து சாதனையைத் தன்வசம் வைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் புனெ வாரியர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சாலஞ்சர்ஸ் அணி இந்தச் சாதனையை நிகழ்த்தியது. கிறிஸ் கெய்ல் 66 பந்துகளில் 175 நாட் அவுட் என்று சாதனை படைத்தார்.
2011ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான கிளஸ்டர் ஷயர், மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக 254/3 என்ற ஸ்கோரை எட்டியது.
2006ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டின் ஆரம்பக் காலக் கட்டங்களில் இங்கிலாந்தின் சாமர்செட் அணி 250/3 என்ற ஸ்கோரை எட்டியது.
2010ஆம் ஆண்டு கராச்சி டால்பின்ஸ் அணியினர் லாகூர் ஈகிள்ஸ் அணிக்கு எதிராக 243/2 என்று அதிகபட்ச ஸ்கோரை எட்டியது பாகிஸ்தான் உள்நாட்டு டி20 சாதனையாகும்.
2008ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் எசெக்ஸ் அணி சசெக்ஸ் அணிக்கு எதிராக 242 ரன்கள் குவித்தது.
2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட்டில் ஒடாகோ அணி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் 242 ரன்கள் எடுத்தது.
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரெய்னா அதிரடி மூலம் 242 ரன்கள் விளாசியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT