Published : 08 Mar 2019 05:35 PM
Last Updated : 08 Mar 2019 05:35 PM

பிஞ்ச் எல்.பி.ஆன பந்தும், ரிவியூ ரீப்ளேயில் காட்டப்பட்ட பந்தும்...: தீராத குழப்பம்... நம்பத்தகுந்ததா தொழில்நுட்பம்?

ஜார்கண்டில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் தொடரை இழப்பதைத் தவிர்க்க போராடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு தொழில்நுட்பமும் உதவி புரியவில்லை, ஆனால் பிஞ்ச், கவாஜா இருவரும் இணைந்து 193 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

 

கிட்டத்தட்ட டேவிட் வார்னர் தடைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் வரும் 2வது சதக்கூட்டணியாகும் இது.

 

இந்நிலையில் 99 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 93 ரன்கள் எடுத்து சதத்துக்குத் தயாராக இருந்தார். அப்போது லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆன குல்தீப் யாதவ் பந்தை பிளிக் ஆட முயன்று பந்தி விட்டார், கால்காப்பில் தாக்க எல்.பி.என்று நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டார்.

 

பிஞ்ச் ஒரு சான்ஸ் இருக்கிறதா என்று பார்க்க ரிவியூ கேட்டார்.  ரிவியூ கேட்ட பிறகு காட்டப்பட்ட ரீப்ளேயில் பால் ட்ராக்கிங் உண்மையில் பந்து பிட்ச் ஆன இடத்துக்கும் இதற்கும் வித்தியாசமாக இருந்தது.  மேலும் லைவில் அந்த பந்து லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி மிகமிக லேசாக உள்ளே திரும்பி கால்காப்பைத் தாக்க ரீப்ளே பந்தோ அதே லைனில் வந்து கொஞ்சம் இன்னும்சற்று முன்னால் பிட்ச் ஆனது போல் காட்டப்பட்டதோடு பந்தின் திசையிலும் மாற்றமிருந்தது.

அதாவது குல்தீப் வீசிய அந்தப் பந்துதான் ரீப்ளேயில் காட்டப்பட்டதா என்ற ஐயம் இந்த ரீப்ளேயைப் பார்த்தவுடன் ஏற்படுவது நியாயமே. எது எப்படியிருந்தாலும் அந்த ஒரிஜினல் பந்தில் பிஞ்ச் பிளம்ப் எல்.பி.தான், அதில் சந்தேகமில்லை, ஆனால் ரீப்ளே ஐயத்துக்கிடமான வகையில் அமைந்தது, இது ஒருவேளை போட்டி முடிந்த பிறகு சர்ச்சையைக் கிளப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

பிஞ்ச் அவுட் ஆகியிருக்கலாம் ஆனால் ரிவியூ ரீப்ளெயில் காட்டப்பட்ட பந்தின் திசை ஐயத்துக்கு கிடமான வகையில் அமைந்தது, அதாவது ஒரிஜினல் பந்தின் திசையின் படி பந்து லெக் ஸ்டம்பை மட்டும்தான் தாக்கியிருக்க வாய்ப்பிருந்ததூ போல் தெரிந்தது, ஆனால் 3ம் நடுவர் ரிவியூ ரீப்ளேயில் லெக் அண்ட் மிடிலை பந்து அடிப்பது போல் காட்டியது சந்தேகத்தைக் கிளப்புவதாக அமைந்தது.

 

உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு துல்லியத்தன்மை வாய்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x