Published : 12 Sep 2014 05:28 PM
Last Updated : 12 Sep 2014 05:28 PM
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பந்து வீச ஐசிசி தடை விதித்தது. இதற்குக் காரணம் ஷேன் வாட்சனின் தொடர் புகார்க்ளே என்று தற்போது கூறப்படுகிறது.
2009ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி ஒன்றின் போது ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன், சயீத் அஜ்மலின் பந்து வீச்சு த்ரோ செய்வது போல் உள்ளது என்று தொடர்ந்து நடுவர்களிடம் வாதாடியபடி இருதார்.
தொடர்ந்து நியூசிலாந்தின் பில்லி பவ்டன் மற்றும் பாகிஸ்தான் நடுவர் ஆசாத் ராஃபிடம் துபாயில் நடந்த அந்த ஒருநாள் போட்டியில் வாட்சன் புகார் அளித்த படியே இருந்தார்.
அதாவது அஜ்மலின் தூஸ்ரா பந்துகள் த்ரோ என்று அவர் தொடர்ந்து முறையிட்டது குறித்து அப்போது வாட்சன் மீது புகார் தெரிவித்தார் அஜ்மல்.
வாட்சன் தொடர்ந்து நடுவர்களிடம் பேசியதால் அஜ்மல் பந்து வீச்சில் பிரச்சினைகள் இருக்கிறது என்று பாகிஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது.
வாட்சன் தேவையில்லாத பிரச்சினைகளைக் கிளப்புகிறார் என்று அப்போது அஜ்மல் கூறியிருந்தார். இந்த சம்பவங்களுக்கு 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் போதும் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் வாட்சன் அவரது பந்து வீச்சு மீது சந்தேகம் எழுப்பினார். இன்றைய தேதியில் அஜ்மல் என்ற பவுலர் பந்து வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த 20 ஓவர் போட்டியில் வாட்சனை எல்.பி. முறையில் வீழ்த்திய அஜ்மல் பெவிலியனை நோக்கிக் கை காண்பித்தார். கடைசியில் வாட்சன் வாதமே வென்றுள்ளது இப்போது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT