Published : 04 Feb 2019 03:40 PM
Last Updated : 04 Feb 2019 03:40 PM
இங்கிலாந்தின் மேட்டிமையை குலைத்துக் கேள்விக்குட்படுத்திய மே.இ.தீவுகள் அணி தொடரை 2-0 என்று கைப்பற்றிய நிலையில் 3வதாக நடைபெறும் செயிண்ட் லூசியா டெஸ்ட் போட்டியில் விளையாட மே.இ.தீவுகள் கேப்டனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது.
ஆண்டிகுவா டெஸ்ட் போட்டியில் அணி மிக மெதுவாகப் பந்து வீசி, குறித்த நேரத்துக்குள் ஓவர்களை முடிக்காததற்கு கேப்டன் ஜேசன் ஹோல்டர்தான் காரணம் என்று கூறி ஐசிசி அவரை செயிண்ட் லூசியா டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை செய்துள்ளது.
பார்பேடோஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 381 ரன்கள் வித்தியாசத்தில் 4 நாட்களுக்குள் முடித்த வெஸ்ட் இண்டீஸ், ஆண்டிகுவாவில் 3 நாட்களில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் ஹோல்டர் இல்லாத போது கிரெக் பிரத்வெய்ட் கேப்டன்சி பொறுப்பை எடுத்துக் கொள்வார். ஹோல்டர் இடத்துக்கு கீமோ பால் என்ற ஆல்ரவுண்டர் வருகிறார்.
அதிவேக இரும்பு வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸும் அணிக்குள் அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஆண்டிகுவா டெஸ்ட் வெற்றியை ஜேசன் ஹோல்டர், தாயை இழந்த அல்சாரி ஜோசப்பின் குடும்பத்துக்கு அர்ப்பணித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்தை 3-0 என்று முடித்து அனுப்ப ஹோல்டர் அணிக்கு அவசியம், ஆனால் ஸ்லோ ஓவர் ரேட் என்று கூறி அவரை உடனடியாக தடை செய்வது சிறு சஞ்சலத்தையும் ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT