Published : 24 Jan 2019 07:11 PM
Last Updated : 24 Jan 2019 07:11 PM

பிரிஸ்பன் டெஸ்ட்: 144 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை; ரிச்சர்ட்சன், பாட் கமின்ஸ் அபாரப் பந்துவீச்சு

பிரிஸ்பனில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் விதமாக 144 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது.  ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.

 

இந்தியா செய்ததை ஆஸ்திரேலியாவுக்குச் செய்வோம் என்று இலங்கை பவுலிங் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயகே சொல்லி முடித்தார், அங்கு பாட் கமின்ஸ், ரிச்சர்ட்ஸன் இலங்கையை அதன் பழைய பார்முக்குக் கொண்டு சென்று விட்டனர்.  இந்திய அணி பயணத்திட்டத்தை வடிவமைக்கும் போதே எச்சரிக்கையாக பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியையும் பகலிரவு டெஸ்ட் போட்டியையும் தவிர்த்தது கவனிக்கத்தக்கது.

 

ரிச்சர்ட்சன் (3/26), கமின்ஸ் (4/39), முதல் 2 செஷன்களில் இலங்கை முதல் இன்னிங்ஸ் கதையை முடித்தனர். மிட்செல் ஸ்டார்க் (2/43) தன் 200வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். 66/5 என்ற நிலையில் நிரோஷன் டிக்வெல்லா (64) அணியை கொஞ்சம் தூக்கி நிறுத்தினார்.

 

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் (15) குசால் மெண்டிஸின் அபாரமான ஸ்லிப் டைவிங் கேட்சுக்கு சுரங்க லக்மலிடம் வெளியேறினார்.  உஸ்மான் கவாஜா (11) ஆட்டம் முடிவதற்கு முன்பாக திலுருவன் பெரேரா பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார். மார்கஸ் ஹாரிஸ் மீண்டும் நிலைத்து ஆடி 40 ரன்களுடன் நாளை இரவுக்காவலன் நேதன் லயனுடன் இரண்டாம் நாளில் களமிறங்கவுள்ளார்.

 

டாஸ் வென்ற இலங்கை அணி லாஹிரு திரிமானே (12), தினேஷ் சந்திமால் (5) ஆகியோரை கமின்ஸ், ரிச்சர்ட்ஸன் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார்கள்.

 

திமுத் கருணரத்னே (24), நேதன் லயன் பந்தில் வெளியேறினார். மெண்டிஸ் 14 ரன்களில் ரிச்சர்ட்ஸன் அவுட் ஸ்விங்கரில் ஸ்கொயர் ஆகி பவுல்டு ஆனார், மிகப்பிரமாதமான பந்தாகும். டிக்வெல்லா போராடி 78 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 78 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து பவுண்டரி அடிக்கும் முயற்சியில் அறிமுக வீரர் கர்டிஸ் பேட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து கமின்சிடம் வெளியேறினார்.

 

2வது செஷனில் இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்தது.  இதனையடுத்து 56.4 ஓவர்களில் 144 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை, ஆஸ்திரேலியா 72/2.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x