Published : 14 Sep 2014 11:18 AM
Last Updated : 14 Sep 2014 11:18 AM

மந்தமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாடம் கற்பித்த லாகூர் லயன்ஸ்

சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியான லாகூர் லயன்ஸ், மந்தமான மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி தட்டுத் தடுமாறி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய லாகூர் லயன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

முதலில் லாகூர் லயன்ஸ் பந்து வீச்சு சர்வதேச அணிகளின் தரத்திற்கு அமைந்ததால் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் குழப்பம் அடைந்தது. பேட்டிங்கில் அந்த அணியின் உமர் அக்மலின் தொழில்பூர்வ தீவிரம் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐபில் ரக மந்தத் தனத்தை அம்பலப்படுத்தியது.

லாகூர் லயன்ஸ் பவுலர் அய்ஜாஸ் சீமா அருமையாக வீசினார். இதனால் 20/0 என்று ஓரளவுக்கு நன்றாக இருந்த மும்பை இந்தியன்ஸ் 23/3 என்று சரிவு கண்டது.

லெண்டில் சிம்மன்ஸ் (7), ஜலஜ் சக்சேனா (0), அம்பாத்தி ராயுடு (3) ஆகியோர் 7 பந்துகள் இடைவெளியில் நடையைக் கட்டினர். முதல் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்தார் அய்ஜாஸ் சீமா. ஆதித்ய தாரே அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். |

மைக் ஹஸி, 26 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 28 ரன்கள் எடுத்து 12வது ஓவரில் அவுட் ஆனார். கடைசியில் ஹர்பஜன் 18 ரன்களையும் பிரவீண் குமார் 20 ரன்களையும் எடுத்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினர். மும்பை இந்தியன்ஸ் 135 ரன்களை எட்டியது. அய்ஜாஸ் சீமா, வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுக்க ஆசிப் ரசா, இம்ரான் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் தொடக்க வீர்ர்களான அகமது ஷேஜாத், நசீர் ஜாம்ஷெட் தொடக்க விக்கெட்டுக்காக 51 ரன்கள் சேர்த்தனர். நசீர் ஜாம்ஷெட்டை விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே சாமர்த்தியமாக ஸ்டம்ப்டு செய்தார்.

அதன் பிறகு நல்ல ஃபீல்டிங்கினால் மும்பை லேசாக வெற்றிப்பாதைக்கு திரும்பியது போல் இருந்தது. மீண்டு பொலார்ட் பந்து வீச வந்த அந்த ஓவரிலிருந்து ஆட்டம் லாகூர் லயன்ஸ் பக்கம் சென்றது. உமர் அக்மல் பின்னி எடுத்தார்.

3 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் டைட்டாக முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மலிங்காவின் ஓவரில் உமர் அக்மல் ஒரு மிகப்பெரிய சிக்சர் மற்றும் பவுண்டரியை அடித்து 15 ரன்களை அடித்தார். 18 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து உமர் அக்மல் லாகூர் லயன்ஸ் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியை தனது பந்து வீச்சின் மூலம் ஆட்டத்தில் மீண்டும் கொண்டு வந்த பிராக்யன் ஓஜா 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்பஜன் 26 ரன்களுக்கு ஒரு விக்கெட்.

இந்த வெற்றி மூலம் லாகூர் லயன்ஸ் அணிக்கு 4 புள்ளிகள் கிடைத்துள்ளது. இன்று நாதர்ன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி லாகூர் லயன்ஸ் அணியையும் மும்பை இந்தியன்ஸ் அணி இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியையும் எதிர்கொள்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x