Published : 19 Jan 2019 04:30 PM
Last Updated : 19 Jan 2019 04:30 PM
20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சாம்பியனாக இருக்கலாம், ஆனால் ஆஸ்திரேலியாவில் விதிமுறைகள் என்றால் விதிமுறைகள்தான்.. கண்டிப்பாக பின்பற்றியாக வேண்டும், அது யாராக இருந்தாலும் சரி என்பதற்கு ரோஜர் பெடரரும் ஒத்துழைத்த சம்பவம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் நடந்தது.
அந்த செக்யூரிட்டி கார்டு தனது வேலையை மிகவும் கடமையுணர்வுடன் செய்பவர், லாக்கர் அறைக்கு பெடரர் வந்த போது அவரைத் தடுத்து நிறுத்தி, ‘அவசரப்படாதீங்க ரோஜர்’ என்று கூறி அடையாள அட்டையைக் காட்டுங்கள் என்றார். ஆனால் பெடரரிடம் அடையாள அட்டை இல்லை.
சமூகவலைத்த்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில் பாதுகாப்பு காவலர் பெடரரை தடுத்து நிறுத்தியது அங்கு வைரலாகி வருகிறது. அங்கு வீரர்கள், மீடியாக்கள், ஊழியரக்ள் என்று யாராக இருந்தாலும் பேட்ஜ் அணிய வேண்டும், அடையாள அட்டை இல்லாமல் வலம்வருதல் கூடாது. பெடரரும் கூட அது இல்லாமல் உள்ளே நுழைய முடியாது என்பதுதான் அங்கு இன்று நடந்தது.
இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து பெடரர் காத்திருந்தார், பிறகு அவரது அணியைச் சேர்ந்த ஒருவர் அடையாள அட்டையைக் காட்டிய பிறகே பெடரர் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அந்த அடையாள அட்டையைக் காட்டிய பிறகு பாதுகாப்பு காப்பாளர் புன்னகையுடன் பெடரரை அனுப்பி வைத்தார்.
நாளை (ஞாயிறு) 4வது சுற்று ஆட்டத்தில் கிரீஸின் ஸ்டெபானோ சிட்சிபாஸை எதிர்கொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT