Published : 26 Sep 2014 11:56 AM
Last Updated : 26 Sep 2014 11:56 AM

சென்னையில் இன்று கூடுகிறது பிசிசிஐ செயற்குழு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. 5 மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தை (ஏஜிஎம்), ஒத்தி வைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் என்.சீனிவாசன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்.

உலகக் கோப்பை வரை இந்திய அணிக்கான உதவி அலுவலர்கள் குறித்து இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது. இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரி மற்றும் உதவிப் பயிற்சியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படவுள்ளது.

ஆனால் வர்ணனையாளரான ரவி சாஸ்திரி, இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் தொடர், ஆஸ்திரேலியத் தொடர், உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றில் பல்வேறு ஊடகங்களுக்காக பணியாற்ற ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருப்பதால், இந்திய அணியின் இயக்குநராக நீடிக்க தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இந்திய அணியின் இயக்குநராக இருந்தால் அவர் வேறு எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியாது. “ஊடகப் பணியை ஆற்ற இயலாமல் போகும்போது அதனால் சாஸ்திரிக்கு ஏற்படும் இழப்பு ஈடுகட்டப்படும்.

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் தொடரின்போது சாஸ்திரி தனது ஊடகப் பணியை கவனிக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியத் தொடர் மற்றும் உலகக் கோப்பை போட்டியின்போது “டிரெஸ்ஸிங்” அறையில் சாஸ்திரி இருக்க வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது” என பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரவி சாஸ்திரியோ, ஏற்கெனவே ஊடக பணியை ஒப்புக்கொண்டுவிட்டதால் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு தனது முடிவை தெரிவிப்பதாக பிசிசிஐயிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அவர் தனது முடிவை செயற் குழு கூட்டத்துக்கு முன்ன தாக தெரிவிப்பார் என எதிர்பார்க் கப்படுகிறது.

உதவி பயிற்சியாளர் பதவி யில் இருந்து நீக்கப்பட்ட தேவ்ஸ், பென்னி ஆகியோர் தங்களின் ஒப்பந்தம் முடியும் வரை பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற் றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கும் பதில், செயற்குழுவில் விவாதிக்கப்படும் என சஞ்சய் பட்டேல் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர், உதவிப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், அருண், தர் ஆகியோர் உலகக் கோப்பை வரை தங்கள் பணிகளில் தொடர உறுதியளிக்கப்படும் என தெரிகிறது. இதேபோல் பிசிசிஐ ஏஜிஎம்மை ஒத்திவைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. பிசிசிஐ விதிமுறைப்படி ஒவ் வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் 21 நாள் கால அவகாசத்தில் பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால் இந்த முறை இன்னும் கூட்டவில்லை.

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் என்.சீனிவாசனை மீண்டுமொரு முறை தலைவராக்குவதற்காக ஆண்டு பொதுக்குழுகூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x