Published : 03 Dec 2018 03:48 PM
Last Updated : 03 Dec 2018 03:48 PM

17 சிக்சர்கள்; ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்; காட்டடி இரட்டை சதம்: ஆஸி. யு-19 கேப்டன் புதிய சாதனை

நியூசவுட்வேல்ஸ் மெட்ரோ கேப்டன் ஆலி டேவிஸ் ஆஸ்திரேலிய தேசிய ஒருநாள் அண்டர்-19 கிரிக்கெட்டில் நாதர்ன் டெரிடரி அணிக்கு எதிராக சாதனை இரட்டைச் சதம் அடித்ததோடு ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையையும் நிகழ்த்தினார்.

ஆலி டேவிஸ் 115 பந்துகளில் 207 ரன்களை விளாசி அசத்தினார். இதில் 2வது சதம் 39 பந்துகளில் விளாசப்பட்டது.இதனையடுத்து நியூசவுத்வேல்ஸ் அணி 50 ஓவர்களில் 406/4 என்று இமாலய ரன் குவிப்பை நிகழ்த்தியது.

18 வயதான ஆலி டேவிஸ் சாதனையான 17 சிக்சர்களை விளாசினார், இதிலேயெ 102 ரன்கள் வந்து விட்டது, இதில் 40வது ஓவரை வீசிய ஜேக் ஜோன்ஸ் என்ற ஸ்பின்னரை 6 பந்துகளிலும் சிக்சர் பறக்கவிட்டார். இந்த பேய் இன்னிங்சில் 14 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்தத் தொடர் ஒருநாள் தொடராக மாற்றப்பட்ட பிறகு முதன் முதலாக இரட்டைச் சதம் அடித்துள்ளார் ஆலி டேவிஸ்.

இவருடன் ஆடிய  சாம் ஃபேனிங் 109 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார், இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்காக 278 ரன்கள் விளாசினர்.

இலக்கை விரட்டிய நாதர் டெரிடரி அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து படுதோல்வி அடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x