Published : 13 Dec 2018 09:30 PM
Last Updated : 13 Dec 2018 09:30 PM

தகர்ந்த கனவு; நொறுங்கிய இதயங்கள்: உலகக்கோப்பை ஹாக்கி காலிறுதியில் நெதர்லாந்திடம் இந்தியா போராடித் தோல்வி

உலகக்கோப்பை ஹாக்கி காலிறுதிப் போட்டியில் நெதர்லாந்திடம் இந்திய அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வி தழுவியதையடுத்து இந்திய அணியின் உலகக்கோப்பை கனவுகள் தகர்க்கப்பட்டன.  மைதானத்தில் இந்திய அணிக்கு கடும் ஆதரவு அளித்த 16,000-17,000 ரசிகர்களின் இதயம் நொறுங்கியது.

 

புவனேஷ்வர் கலிங்கா மைதானத்தில் நடந்த இந்தக் காலிறுதிப் போட்டியின் 12வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் முதல் கோலை அடித்து இந்திய அணிக்கு முன்னிலை கொடுத்தார். ஹர்மன்பிரீத் சிங்கின் ட்ராக் பிளிக் பர்மின் பிளாக் பேடில் பட்டு திரும்பியதை ஆகாஷ் தீப் சிங் சமயோசிதமாக வலைக்குள் திணித்தார் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

 

அதன் பிறகு நெதர்லாந்து ஆட்டத்திலி சூடுபிடித்தது, இந்திய அணிக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது, இந்திய அணியும் எதிர்த்தாக்குதல் நடத்தியது, ஆனால் முதல் கால்மணி நேர ஆட்டத்தின் கடைசி சில விநாடிகளில் ஃப்ரீ ஹிட் ஒன்றை நெதர்லாந்து வீரர் தியரி பிரிங்க்மேன் கோலுக்குள் திருப்பி விட்டு 1-1 என்று சமன் செய்தார்.

 

இதன் பிறகு அடுத்த 2 கால்மணி நேர  ஆட்டமும் விறுவிறுப்பு சற்றே குறைந்து காணப்பட்டது.  ஆனாலும் இந்தியாவுக்கு இந்த அரைமணி நேர ஆட்டத்தில் கிடைத்த கோல் வாய்ப்புகளை வீணடித்தது, அல்லது நெதர்லாந்து தடுப்பு வியூகத்தை உடைக்க முடியவில்லை, இந்த வேதனையான கணங்களை நெதர்லாந்து தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

 

இடையில் நெதர்லாந்து தாக்குதலையும் இந்திய அணி முறியடித்தது, ஒரு நெருக்கமான வாய்ப்பை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்தார். ஒரு நெதர்லாந்து கோலை இந்தியா மேல்முறையீடு செய்து வாபஸ் பெறச் செய்தது, கோலுக்குள் செல்லும் முன் நெதர்லாந்து வீரர் காலில் பட்டது நிரூபணமானது, இதிலிருந்து தப்பிப் பிழைத்த இந்திய அணிக்கு கோல் வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருந்தன, பெனால்டி கார்னர் வாய்ப்பும் கோலாகத் தகையவில்லை. நெதர்லாந்து கோல் கீப்பர் ஒரே ஷாட்டின் இரு வாய்ப்புகளை, அதாவது நேரடி வாய்ப்பு ஒன்று, மற்றொன்று ரீபவுண்ட் ஆகி வந்த வாய்ப்பு இரண்டையும் தடுத்து இந்திய அணியின் முயற்சிகளை முறியடித்தார்.

 

இந்நிலையில் 50வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க நெதர்லாந்து வீரர் மிங்க் வான் டெர் வியர்டன் மிக அருமையான டிராக் பிளிக்கில் சக்தி வாய்ந்த ஷாட்டை அடிக்க ஸ்ரீஜேஷால் ஒன்றும் செய்ய முடியவில்லை நெதர்லாந்து வெற்றி கோலாகவும் இது அமைந்தது.

 

இதனையடுத்து அரையிறுதியில் கால்பதித்த நெதர்லாந்து, அதில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்க, மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியை 2-1 என்று வீழ்த்திய பெல்ஜியம் அணி இங்கிலாந்தைச் சந்திக்கிறது.

 

இப்போதைய விதிகளின் படி பிளே ஆஃப் மேட்ச்கள் இல்லாததால் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் விதிகளின் படி இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் 16 அணிகளில் 6ம் இடம் பிடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x