Last Updated : 10 Dec, 2018 09:32 AM

 

Published : 10 Dec 2018 09:32 AM
Last Updated : 10 Dec 2018 09:32 AM

வெற்றி விளிம்பில் இந்தியா: தோல்வியைத் தவிர்க்க ஆஸி.போராட்டம்

அடிலெய்டில் நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர். தோல்வியின் பிடியில் இருப்பதால், அதைத் தவிர்க்கும் பொருட்டு, டெய்லெண்டர் பேட்ஸ்மேன்கள் போராடி வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 4-வது நாள் நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்னும் வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இன்று காலை 'செஷனில்' 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

அடிலெய்டில் நடந்துவரும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணி 250 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 235 ரன்களும் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதையடுத்து 323 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

4-வதுநாளான நேற்றைய ஆட்டநேர இறுதிவரை ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் சேர்த்திருந்தது. மார்ஷ் 31 ரன்கள், ஹெட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

காலை நேர பனியையும், குளிரையும் பயன்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக லைன் லென்த்தில் பந்துவீசினார்கள். குறிப்பாக இசாந்த் சர்மா, பும்ராவின் பந்துகள் ஏராளமானவே பீட்டன் ஆகின. இதனால், ரன் சேர்க்க முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

இசாந்த் சர்மா வீசிய 57வது ஓவரில் 'ஷார்ட் பிட்ச்சாக' வந்த பந்தை அடிக்க 'ஷார்ட் முயன்றார். ஆனால், கல்லியில் நின்றிருந்த ரஹானேயிடம் பந்து தஞ்சம் அடைந்தது. 'ஷார்ட்14 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து பைன் களமிறங்கினார். இருவரும் நிதானமாக பேட் செய்தனர், ஆனால், ரன்களை ஸ்கோர் செய்ய முடியவில்லை. மார்ஷ் அரைசதம் எட்டினார். ஏறக்குறைய 18 ஓவர்கள் வரை இருவரும் நிலைத்தனர்.

பும்ரா வீசிய 73-வது ஓவரில் மார்ஷ் 60 ரன்கள் சேர்த்திருந்தபோது, ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பும்ரா வீசிய இந்தப் பந்து மிக அற்புதமானது. லைன் லெத்தின் சரியாக வந்த பந்தை அடிக்காமல் இருக்க முடியவில்லை, பேட்டை எடுத்து பந்தை விடவும் முடியாத குழப்பத்தில் ஷான் மார்ஷை தள்ளியது. கடைசியில் மார்ஷின் பேட்டில் பட்டு பந்து கேட்சாக மாரியது.

வெற்றிக்கு அருகே வந்துவிட்டதால் இந்திய வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசினார்கள். பைன், கம்மின்ஸ் களத்தில் இருந்து சமாளித்னர். பும்ரா வீசிய 84-வது ஓவரில் அடுத்த விக்கெட் விழுந்தது. 'ஷார்ட் பிட்சாக வந்த இந்தப் பந்தை மிட்விக்கெட்டில் அடிக்க முற்பட்டார் பைன், ஆனால், பந்து பேட்டின் நுனியில் பட்டு ரிஷப் பந்திடம் கேட்சாக மாறியது. பைன் 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

100-வது ஓவரை வீசிய முகமது ஷமியின் ந்துவீச்சில் ஸ்டார்க் வெளியேறினார். ரிஷப் பந்திட் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் ஸ்டார்க் ஆட்டமிழந்தார்.

களத்தில் லயான் ரன் ஏதும் எடுக்காமலும், கம்மின்ஸ் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 101 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் வெற்றிக்கு 95 ரன்கள் தேவைப்படுகிறது. இன்னும் 44 ஓவர்கள் மீதம் இருக்கின்றன. இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், ஆட்டம் டையில் முடியுமா, அல்லது இந்திய அணி வரலாற்று வெற்றியைப் பெறுமா என்பது த்ரில்லிங்காக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x