Published : 20 Sep 2014 03:15 PM
Last Updated : 20 Sep 2014 03:15 PM

ஆசிய விளையாட்டு: இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி தோற்று வெளியேறியது

இன்சியானில் நடைபெறும் 17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் பேட்மிண்டன் அணி தோல்வியடைந்து வெளியேறியது.

தென்கொரியாவுக்கு எதிராக இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 0-3 தோல்வி தழுவியது.

இந்திய இரட்டையர் ஜோடியான சுமீத் ரெட்டி- மனு அத்ரி தென்கொரியாவின் உலகின் நம்பர் 1 ஜோடியான இயான் சியாங்- லீ யாங் டே ஜோடியிடம் 12-21, 9-21 என்ற செட்களில் தோல்வி தழுவியது.

ஒற்றையரில் ஸ்ரீகாந்த் தென்கொரியாவின் உலக நம்பர் 7 வீரரான சன் வான் - ஹோ என்பவரிடம் 14-21, 8-21 என்ற செட்கணக்கில் தோல்வி தழுவினார்.

இந்நிலையில் காஷ்யப் மீது பொறுப்பு கூடியது. ஆனால் அவரை உலகத் தரவரிசை 62ஆம் இடத்தில் உள்ள தென்கொரிய வீரர் லீ ஹியூன் அதிர்ச்சித் தோல்வியுறச் செய்தார்.

காஷ்யப் முதல் கேமில் ஆக்ரோஷமாக விளையாடி 21-6 என்று வென்றார். ஆனால் திடீரென அவர் தனது ஆட்டமனைத்தையும் இழந்து அடுத்த 2 செட்களை 14-21, 10-21 என்று இழந்தார்.

இந்திய மகளிர் பேட்மிண்டன் அணி காலிறுதியில் இன்று தாய்லாந்து அணிக்கு எதிராக மோதுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x