Published : 05 Dec 2018 09:08 AM
Last Updated : 05 Dec 2018 09:08 AM
விராட் கோலி தலைமையில், ரவிசாஸ்திரி மேற்பார்வையில் இன்று தொடக்க வீரர்களை வைத்து ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டு விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கவுதம் கம்பீர்-விரேந்திர சேவாக் தொடக்கக் கூட்டணி இந்தியாவின் மிகச்சிறந்த கூட்டணியாக உருவெடுத்ததில் கேப்டன் கங்குலிக்கும் பிறகு தோனிக்கும் நிறைய பங்கு உண்டு.
கம்பீர் வேகப்பந்து வீச்சாளர்களை டெஸ்ட் போட்டியில் நடந்து வந்து நேராக சிக்ஸ் அடிக்கும் ராய் பிரெட்ரிக்ஸ் திறமை படைத்தவர், என்றால் சேவாக் ஒரு கார்டன் கிரீனிட்ஜ் பாணி அதிரடி வீரர் என்று ஒப்பிட வாய்ப்புள்ளது. ஆனால் பிறகு கம்பீர் மிகப் பொறுமையான பேட்ஸ்மென் ஆனார். தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கிரீன் டாப் விக்கெட்டில் பாலோ ஆன் ஆடிய போது கம்பீர் உடல் முழுதும் அடி வாங்கிக் கொண்டு 90+ ஸ்கோரை அடித்த போது அவரிடம் அவரது குருநாதர் மொஹீந்தர் அமர்நாத்தைக் காண முடிந்தது.
கவுதம் கம்பீர், விரேந்திர சேவாக் தொடக்கக் கூட்டணி இந்திய அணிக்கு நிலையான கூட்டணியாக அமைந்தது. இவர்கள் கூட்டணி இல்லாவிட்டால் இன்று தோனியை யாரும் சிறந்த கேப்டன் என்று அழைக்க வாய்ப்பில்லை.
சேவாக்-கம்பீர் இணைந்து 87 இன்னிங்ஸ்களில் இந்தியச் சாதனையான 4,412 ரன்களை 2004-2012 காலக்கட்டங்களில் சேர்த்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் அளவில் 5வது மிகச்சிறந்த தொடக்கக் கூட்டணியாகும். ஒருகட்டத்தில் 7முறை தொடர்ச்சியாக 50+ தொடக்கக் கூட்டணியை அமைத்துள்ளனர்.
குறைந்த டெஸ்ட் அதிக ரன் தொடக்கக் கூட்டணியில் வினு மன்கட்-பங்கஜ் ராய் கூட்டணியைக் குறிப்பிடலாம் இருவரும் 16 டெஸ்ட் போட்டிகளில் 868 ரன்களை 57.86 என்ற சராசரியில் எடுத்துள்ளனர்.
இந்தியாவில் சுனில் கவாஸ்கர்-சேத்தன் சவுகான் ஜோடிதான் கம்பீர்-சேவாகுக்கு முன்னர் சிறந்த தொடக்க ஜோடியாக இருந்துள்ளனர். இருவரும் சேர்ந்து 59 இன்னிங்ஸ்களில் 3010 ரன்களை 53.75 என்ற சராசரியில் 10 சதக்கூட்டணி 10 அரைசதக் கூட்டணியுடன் எடுத்துள்ளனர். அவர்களை சேவாக்-கம்பீர் கடந்து விட்டனர்.
ஆகாஷ் சோப்ரா-சேவாக் ஜோடி 19 டெஸ்ட்களில் 897 ரன்களை 47.21 என்ற சராசரியில் எடுத்துள்ளனர். 4 சதக்கூட்டணி, 2 அரைசதக் கூட்டணி. கவாஸ்கர்-ஸ்ரீகாந்த் தொடக்க ஜோடி 34 இன்னிங்ஸ்களில் 1469 ரன்களை 3 சதக்கூட்டணி, 9 அரைசதக் கூட்டணியுடன் எடுத்துள்ளனர்.
ஜாஃபர் சேவாக் ஜோடி 28 இன்னிங்ஸ்களில் 1031 ரன்களை 3 சதக்கூட்டணி, 4 அரைசதக் கூட்டணியுடன் எடுத்துள்ளனர்.
அதேபோல் ஹாப்ஸ்-சட்கிளிப் தொடக்க ஜோடிக்குப் பிறகு சிறந்த டெஸ்ட் தொடக்க ஜோடியாக கவுதம் கம்பீர்-சேவாக் ஜோடி கருதப்படுகின்றனர்.
கவுதம் கம்பீர் 2008-2010-ம் ஆண்டுகளுக்கு இடையே 11 தொடர் டெஸ்ட் போட்டிகளில் 50+ ஸ்கொர்களை அடித்து விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்தார், இதே சாதனையின் போதுதான் 5 டெஸ்ட் சதங்களை தொடர்ச்சியாக எடுத்து சாதனை புரிந்தார். 2009-ல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் கவுதம் கம்பீர் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் டெஸ்ட் போட்டியின் மாரத்தான் இன்னிங்ஸ் என்று அழைக்கப்படும் நியூஸிலாந்துக்கு எதிரான இன்னிங்ஸை அங்கு சென்றிருந்த போது ஆடி அசத்தினார். இந்த இன்னிங்ஸ் இந்திய அணி பாலோ ஆன் ஆடிய இன்னிங்ஸ் இதில் 643 நிமிடங்கல் கிரீசில் நின்று 137 ரன்களை எடுக்க டெஸ்ட் போட்டி ட்ரா ஆனதோடு நியூஸிலாந்து மண்ணில் ஒரு அரிய டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.
2007 டி20 உலகக்கோப்பை இறுதியில் 75 ரன்களை எடுத்தார், நாம் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றோம் 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சச்சின், சேவாக் ஏமாற்றமளிக்க கம்பீர் நின்றார் 97 ரன்களை எடுத்தார், இவரும் கோலியும் இடையில் ஸ்திரப்படுத்தியதால் தோனி கடைசியில் சிக்ஸருடன் பினிஷ் செய்ய முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT