Published : 18 Sep 2014 03:34 PM
Last Updated : 18 Sep 2014 03:34 PM

105 பந்துகளில் 90 ரன்கள் விளாசி டெர்பி ஷயர் வெற்றிக்கு வித்திட்ட புஜாரா

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் திணறிய புஜாரா அங்கு டெர்பி அணிக்காக கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். முதல் 3 இன்னிங்ஸ்களில் சொதப்பிய அவர் கடைசியாக அதிரடி முறையில் 90 ரன்களை விளாசினார்.

சர்ரே அணிக்கும், டெர்பிஷயர் அணிக்குமான 4 நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் சர்ரே அணி 181 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய டெர்பிஷயர் அணி தன் முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு மடிந்தது. இதில் புஜாரா 16 ரன்கள் எடுத்து லின்லி என்பவர் பந்தில் கிளீன்பவுல்டு ஆனார்.

சர்ரே அணி 2வது இன்னிங்ஸில் 279 ரன்களை எடுக்க, டெர்பி அணிக்கு வெற்றி இலக்கு 251 ரன்கள். இந்நிலையில் டெர்பி வீரர் காடில்மேன் சதம் எடுக்க, புஜாரா 105 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இவரும் காடில்மேனும் இணைந்து 154 வெற்றி ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர். இதில் புஜாரா ஆதிக்கம் செலுத்தி 90 ரன்கள் எடுத்தார்.

அபாரமான புல் ஷாட், நேர் டிரைவ், மற்றும் கட்ஷாட்களை ஆடிய புஜாரா அரைசதத்தை 61 பந்துகளில் எடுத்தார். குட் லெந்த் பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் புஜாரா.

இதற்கு முன் 3 இன்னிங்ஸ்களில் 7, 0, 16 ரன்கள் என்று சொதப்பிய புஜாரா நேற்று எடுத்த 90 ரன்கள் அபாரமானது என்று இங்கிலாந்து ஊடகங்கள் சில புகழ்ந்து எழுதியுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x