Published : 22 Nov 2018 09:23 AM
Last Updated : 22 Nov 2018 09:23 AM
இந்தியாவுக்கு எதிரான அடிலெய்ட் மற்றும் புதிய பெர்த் மைதான டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் விக்டோரியாவைச் சேர்ந்த புதுமுக தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரது சேர்ப்பு குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் முன்பு லாங்கர் கூறிய கருத்தை ஒப்பிட்டு ஆச்சரியம் வெளியிட்டுள்ளன.
இவர் ஆஸ்திரேலியாவின் கடினமான உள்நாட்டுக் கிரிக்கெட் தொடரான ஷெஃபீல்ட் ஷீல்ட் கிரிக்கெட்டில் இந்த சீசனில் 87.40 என்ற சராசரி வைத்துள்ளார். இதனையடுத்து மார்கஸ் ஹாரிஸை ஆஸி. தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.
இவர் 2015-15 ஷெஃபீல்ட் ஷீல்ட் சீசனில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியிலிருந்து விக்டோரியாவுக்கு நகர்ந்தார். அப்போது வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பயிற்சியாளராக இருந்தவர் நடப்பு ஆஸ்திரேலிய அணிப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் என்பது தற்செயலானது.
அப்போது மார்கஸ் ஹாரிஸை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ‘மிகச்சாதாரண’ வீரர் என்று வர்ணித்தார், அதாவது பெரிய திறமைகளெல்லாம் ஒன்றுமில்லை, அவ்வப்போது தெறிக்கும் சில ஆட்டங்களைத் தவிர வேறொன்றும் சிறப்பாக மார்கஸ் ஹாரிஸிடம் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறிய மார்கஸ் ஹாரிஸ் விக்டோரியா அணிக்காக ஆடி தன்னை நிரூபித்தார், ‘மிகச்சாதாரணம்’ என்று தன்னை அழைத்த லாங்கரை மீண்டும் தன் பேட்டிங்கினால் தேசிய அணிக்கு அழைக்குமாறு செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT