Published : 02 Nov 2018 09:25 AM
Last Updated : 02 Nov 2018 09:25 AM
ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி எஃப்.சி - கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
கோவையில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-வது நிமிடத்தில் நெஸ்டர் ஜீசஸ் கோல் அடிக்க சென்னை சிட்டி எஃப்.சி 1-0 என முன்னிலை பெற்றது.
திடீரென சென்னை சிட்டி எஃப்.சி அணியின் கேப்டன் ரெஜினுக்கு காயம் ஏற்பட்டதால், ஆட்டத்திலிருந்து வெளியேறினார். இதையடுத்து பெட்ரோ ஜாவியர் அணியை வழிநடத்தினார். முதல் பாதியில் சென்னை சிட்டி எஃப்.சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இடைவேளைக்குப் பின்னர் 51-வது நிமிடத்தில் சர்ச்சில் பிரதர்ஸ் அணி பதிலடி கொடுத்தது. நெனாட் நோவாகோவிக் அடித்த இந்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. அடுத்த 7-வது நிமிடத்தில் இஸ்ரேல் குருங் கோல் அடிக்க சர்ச்சில் பிரதர்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அந்த அணியின் மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை.
62-வது நிமிடத்தில் சென்னை சிட்டி எஃப்.சி அணி வீரர் சாண்ட்ரோ அசத்தலாக கோல் அடிக்க ஆட்டம் 2-2 என்ற சமநிலையை எட்டியது. இதன் பின்னர் கடைசி வரை போராடியும் இரு அணிகளாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றன. இரு ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சிட்டி எஃப்.சி அணி 4 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.
ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணி வீரர் நெனாட் நோவாகோவிக்குக்கு சென்னை சிட்டி எஃப்.சி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ் பரிசு வழங்கினார்.ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட சர்ச்சில் பிரதர்ஸ் அணி வீரர் நெனாட் நோவாகோவிக்குக்கு பரிசு வழங்கிய சென்னை சிட்டி எஃப்.சி அணியின் உரிமையாளர் ரோஹித் ரமேஷ். படங்கள்: ஜெ.மனோகரன்ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் நேற்று கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்சி - கோவா சர்ச்சில் பிரதர்ஸ் அணிகள் மோதின. இதில் கோவா அணியின் டிபன்டர்களுக்கு ஊடாக பந்தை உதைக்கிறார் சென்னை சிட்டி எஃப்சி அணி வீரர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT