Last Updated : 30 Sep, 2018 05:32 PM

 

Published : 30 Sep 2018 05:32 PM
Last Updated : 30 Sep 2018 05:32 PM

‘மேலாடை இன்றி செரீனா வில்லியம்ஸ்’ - மார்பகப் புற்றுநோய் குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில், மேலாடையின்றி பாடல் பாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஐ டச் மைஷெல்ப் என்ற பாடல் வரிகளைப்பாடி, தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து, மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தி டிவினில்ஸ் 1991 பாடலை அடிப்படையாக வைத்து, இந்தப் பாடல் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மார்பகப் புற்றுநோய் நெட்வோர் இதற்கு ஆதரவு அளித்துள்ளது.

செரீனா வில்லியம்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது:

''இது மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாதம். உலகளவில் பிரபலம் ஆகிய தி டிவினில்ஸ் பாடலைப் பதிவு செய்து உங்களுக்கு விழிப்புணர்வு செய்துள்ளோம். ஐ டச் மை ஷெல்ப் என்ற பாடல் மூலம் பெண்கள் நாள்தோறும் தங்கள் மார்பகங்களைத் தொட்டுப் பார்த்து மார்பகப் புற்றுநோய் அறிகுறிகளை அறியலாம்.

இந்த வீடியோ ஐ டச் மைஷெல்ப் திட்டம் என்பது, மார்பகப் புற்றுநோயால் இறந்த புகழ்பெற்ற திவா, கிறிஸி ஆம்ப்லெட் ஆகியோரின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ளது. பெண்களின் உடல்நலத்தை வலியுறுத்தி பல்வேறு பாடல்களைப் பாடிய இவர்களுக்காக இதை அர்ப்பணிக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

ஐ டச் மைசெல்ப் என்ற பாடல் ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் என்ற பெண் எழுதிப் பாடினார். ஆனால், அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்பகப் ற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் செரீனா வில்லியம்ஸ் பதிவிட்டவுடன் 10 மணிநேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு உண்டாக்கும் வகையில் செரீனா எடுத்துள்ள முயற்சியை அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளனர்.

அருமை செரீனா, உங்களின் அருமையான குரலில் பெண்களுக்கு மிகச் சிறப்பான செய்தியை அளித்துவீட்டீர்கள் என்று பலர் பாராட்டியுள்ளனர். நானும் மார்பகப் புற்றுநோய் உள்ளவர்தான், உங்களின் இந்தச் செய்தி சக்திவாய்ந்தது என்று ஒரு பெண் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x