Last Updated : 08 Oct, 2018 01:29 PM

 

Published : 08 Oct 2018 01:29 PM
Last Updated : 08 Oct 2018 01:29 PM

ஆபத்தான நிலையில் மேத்யூ ஹேடன்- பலத்த காயங்களுடன் சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியீடு

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட போது, மிகப்பெரிய விபத்தில் சிக்கியுள்ளார்.

அவரின் கழுத்து, தலை, முதுகு தண்டுவடம் ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதுபோல், புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.

ஆனால், அலைச்சறுக்கு விளையாட்டில் இருந்து போது, ஹேடன் விபத்தில் சிக்கியுள்ளார். மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் தப்பித்தேன் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஹேடன், குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க குயின்ஸ்லாந்து நகரத்துக்குச் சென்றுள்ளார். அப்போது இந்த விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குயின்ஸ்லாந்தில் உள்ள நார்த் ஸ்டிராட்போர்க் தீவுக்கு ஹேடன், தனது மகன், குடும்பத்தாருடன் வெள்ளிக்கிழமை சென்றார். அப்போது கடலில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஹேடன் ஈடுபட்டுள்ளார். அப்போது, இந்த விபத்து நடந்துள்ளது.

ஹேடனின் முதுகு தண்டுவடம் செல்லும் கழுத்துப்பகுதி, தலை, நெற்றுப்பகுதி, என பல்வேறு இடங்களில் பலத்த காயங்களுடன் படுத்தபடுக்கையாக ஹேடன் உள்ளார்.

மேத்யூ ஹேடன் ஆஸ்திரேலிய நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ மிகப்பெரிய ஆபத்தான விபத்தில் இருந்து தப்பித்து நான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என்னைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி. நான் அலைச்சறுக்கு விளையாட்டில் இருந்தபோது, தொடர்ச்சியாக அரை டஜனுக்கும் அதிகமான ராட்சத அலைகள் தொடர்ந்து என்னைத் தாக்கின. அப்போது அலை என்னை உள்ளே அழுத்து சென்றதால், அதற்குள் சிக்கிக்கொண்டேன்.

அங்கிருந்து தூக்கி வீசப்பட்டு மிகப்பெரிய மணற்பரப்பில் நான் படுகாயங்களுடன் கிடந்தேன். என்னால் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்லக்கூட முடியவில்லை. அப்பகுதியில் இருந்தவர்கள் என்னை மீட்டு சிகிச்சை அளித்தனர். அப்போது எனக்கு உடலில் பல்வேறு காயங்கள், எலும்பு முறிவுகள் இருப்பது தெரியவந்தது. நான் பிழைத்தது கடவுளின் கருணை என்று ஹேடன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஹேடன் ஓய்வு அறிவித்தார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹேடன் 8,625 ரன்கள் குவித்துள்ளார். இதில் 30 சதம், 29 அரைசதம். 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 6,133 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 10 சதங்கள், 36 அரைசதங்கள் அடங்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x