Last Updated : 13 Oct, 2018 09:16 PM

 

Published : 13 Oct 2018 09:16 PM
Last Updated : 13 Oct 2018 09:16 PM

மழை விளையாடியது: இங்கிலாந்திடம் தோற்றது இலங்கை; வோக்ஸ், ஸ்டோன் முத்தாய்ப்பு

தம்புலாவில் இன்று பகலிரவாக நடந்த 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் இலங்கை அணியை டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ், ஸ்டோன் ஆகியோர் இலங்கையின்தொடக்க சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். பேட்டிங்கில் கேப்டன் மோர்கன், ஜோய் ரூட்ஆகியோர் சிறப்பாக ஸ்கோர் செய்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்கள். ஆட்டநாயகநன்விருதை மோர்கன் பெற்றார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைவகிக்கிறது.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு இங்கிலாந்துஅணி ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. இதையடுத்து, 2-வது ஒருநாள் போட்டி தம்புலாவில் இன்றுபகலிரவாக நடந்தது.

டாஸ்வென்ற இலங்கை கேப்டன் சந்திமால் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, பேட் செய்தஇங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது.

மலிங்கா வீசிய முதல் ஓவரிலேயே ஜேஸன் ராய் விக்கெட்டை இங்கிலாந்து இழந்தது. 2-வது விக்கெட்டுக்குபேர்ஸ்டோ, ரூட் கூட்டணி 72 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. பேர்ஸ்டோ 23 ரன்களில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் மோர்கன், ரூட் கூட்டணி அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் சென்றது. இருவரும் அரைசதம் அடித்தனர். ரூட் 71 ரன்களிலும், மோர்கன் 92 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால், 218 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், நடுவரிசை வீரர்கள் சிறப்பாக பேட்செய்யாததால், கடைசி 5 விக்கெட்டுகளை 60 ரன்களுக்குள்இழந்தது இங்கிலாந்து.

இலங்கை தரப்பில் மலிங்கா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

279 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஏற்கனவேஆசியக்கோப்பையில் கத்துக்குட்டிகளிடம் அடிவாங்கி, அவுட் ஆப் பார்மில் இலங்கை வீரர்கள் தவித்துவருகின்றனர்.

இந்த சூழலில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 9 ஓவர்களில் 4 முக்கியவிக்கெட்டுகளை பறிகொடுத்தது இலங்கை அணி. கிறிஸ் வோக்ஸ், ஒலே ஸ்டோன் இருவரும் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு தண்ணிகாட்டி, பெவிலியனுக்கு அனுப்பினார்கள்.

டிக்லேவா(9),தாரங்கா(0), சந்திமால்(6), சனகா(8) எனச் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதனால், 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி. 5-வது விக்கெட்டுக்கு டி சில்வா, பெரேரா கூட்டணிஓரளவு நிலைத்து ஆடி ரன்களைச் சேர்த்தனர். பெரேரா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

6-வது விக்கெட்டுக்கு டிசில்வா(36), டிபெரேரா(44) ரன்கள் சேர்த்திருந்தனர். அணியின் ஸ்கோர் 29 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் என்ற நிலை இருந்தது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டுதொடர்ந்து நிற்காமல் பெய்தது. இலங்கையின் வெற்றிக்கு 139 ரன்களும், கைவசம் 21 ஓவர்களும், 5 விக்கெட்டுகளும் இருந்தன.

தொடக்கத்திலேயே இலங்கை அணி விக்கெட்டு்களை இழந்தது, ரன் குவிப்பு வேகம் ஆகியவற்றைப்போட்டி நடுவர்கள் கணக்கிட்டனர்.

இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் விதிப்படி, இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாச்தில் இலங்கையைவீழ்த்தியதாகப் போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x