Published : 14 Aug 2014 11:06 AM
Last Updated : 14 Aug 2014 11:06 AM

ஆக.18-ல் தேசிய ஜூனியர் டென்னிஸ்

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) சார்பில் அடிடாஸ்-எம்.சி.சி. தேசிய ஜூனியர் டென்னிஸ் போட்டி (18 வயதுக்குட்பட்டோருக்கானது) வரும் 18-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதுதொடர்பாக எம்சிசி தலைவர் அஜித் கும்பாட், தமிழ்நாடு டென்னிஸ் சங்க செயலர் சி.பி.என்.ரெட்டி, போட்டி இயக்குநர் ஹிடேன் ஜோஷி உள்ளிட்டோர் கூறியதாவது:

அகில இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் தமிழக டென்னிஸ் சங்கத்தின் ஆதரவுடன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் உள்ளிட்ட 5 மைதானங்களில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. ஆடவர், மகளிர் பிரிவுகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்று வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இரட்டையர் பிரிவு போட்டிகளின் இறுதிச்சுற்று வரும் 22-ம் தேதியும், ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று 23-ம் தேதியும் நடைபெறுகின்றன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x