Published : 26 Oct 2018 09:15 AM
Last Updated : 26 Oct 2018 09:15 AM
வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர்கள் பல்வேறு அணிகளில் பங்கேற்று விளையாடுகின்றனர்.நாட்டின் பல்வேறு நகரங்களில், லீக் முறையில் 110 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் சென்னை சிட்டி எப்சி அணியில் 10-க்கும் மேற்பட்ட தமிழக வீரர்கள், ஸ்பெயினை சேர்ந்த 4 வீரர்கள் உட்பட 28 வீரர்கள் உள்ளனர். மொத்தம் 20 ஆட்டங்களில் இந்த அணி பங்கேற்கிறது.
இதில் 10 ஆட்டங்கள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகின்றன.இன்று மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில், சென்னை சிட்டி எப்சி அணி, இந்தியன் ஏரோஸ் அணியை எதிர்கொள்கிறது.இந்த ஆட்டம் குறித்து சென்னை சிட்டி எப்சி அணியின் தலைமை பயிற்சியாளர் அக்பர் நவாஸ், கேப்டன் ரெஜின் மைக்கேல் ஆகியோர் `இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:கடந்த சீசனில், கேப்டனாக இருந்த சூசை ராஜ், தனது சிறப்பான விளையாட்டால் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தார்.நடப்பாண்டு அவர் எங்கள் அணியில் இல்லாவிட்டாலும், அவருக்கு இணையான பல இளம் வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். கடந்த 3 மாதங்களாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த தொடரில் கிடைத்த அனுபவம், தொழில்நுட்ப ரீதியான பயிற்சி உள்ளிட்டவை நிச்சயம் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்கியுள்ளது. உள்ளூர் களம் என்பதால் பார்வையாளர்களின் ஊக்கம் எங்களை உற்சாகப்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT