Published : 12 Oct 2018 03:42 PM
Last Updated : 12 Oct 2018 03:42 PM

‘சிராஜைப் பின்னுக்குத் தள்ளி ஷர்துல் தாக்குர்.. இது ஏன் கருண் நாயருக்கு நடக்கவில்லை’ - ஹர்ஷா போக்ளே ஆதங்கம்

இந்திய அணியின் 294வது கிரிக்கெட் வீர்ராக, மும்பையிலிருந்து இந்தியாவுக்கு ஆடும் 74வது வீரராக ஷர்துல் தாக்கூர் என்று மே.இ.தீவுகளுக்கு எதிராக அறிமுகப் போட்டியில் களமிறங்கினார்.

ஆனால் அவரது அறிமுக டெஸ்ட் 10 பந்துகளில் காயம் காரணமாக முடிவுக்கு வந்தது. இதற்கு ‘ஹார்ட் லக்’ என்று நெட்டிசன்கள் பலரும் கூற ஒரு சிலர் அவரது தேர்வையே கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.

பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே த ட்விட்டர் பக்கத்தில்,

“இந்தியா ஏ-வுக்காக சிராஜ் பிரமாதமாக ஆடினாலும் அவருக்குப் பதில் ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது சரியே, ஏனெனில் தாக்குர் சிராஜுக்கு முன்பாகவே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் இப்படி யோசிக்கும் போதே கருண் நாயருக்கு மட்டும் ஏன் இது போன்ற சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என்பது மட்டும் எனக்கு இன்னமும் புரியாத இருள் பிரதேசமாக இருக்கிறது” என்று ட்வீட் செய்துள்ளார்.

சஞ்சய் மஞ்சுரேக்கர், “மயங்க் அகர்வாலையும் எடுத்திருக்கலாம், பேட்டிங் மாற்றுகளுக்கு சரியான தருணம் இதுதான்” என்று டிவீட் செய்துள்ளார்.

மகரந்த் வைகங்கர் என்ற மூத்த கிரிக்கெட் எழுத்தாளர் மற்றும் கிரிக்கெட் நிர்வாகி ஷர்துல் தாக்குருக்கு ஆதரவாக ட்வீட் செய்த போது, “இன்னொரு பாம்பே வேகப்பந்து வீச்சாளார் அறிமுகம். 73வது பாம்பே டெஸ்ட் வீரர். பாய்சார் கிராமத்திலிருந்து வந்த ஒரு கடின உழைப்பு வீரர். பாம்பேவுக்கு ரயிலில் வந்து பயிற்சி மேற்கொள்பவர் ஷர்துல்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இன்னும் சிலர் சிராஜ்தான் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் என்றும், சிலர் ஷர்துல் தாக்குர் டெஸ்ட் அணிக்கு லாயக்கில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x