Published : 04 Oct 2018 06:19 PM
Last Updated : 04 Oct 2018 06:19 PM

அணித்தேர்வாளார்கள் மீதான ஹர்பஜன் விமர்சனம் சரிதான்: அதிருப்தியில் முரளி விஜய்

கருண் நாயர் விவகாரத்தில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான அணித்தேர்வாளர்கள் மீது கடும் அதிருப்திகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில் தற்போது முரளி விஜய்யும் தன் அதிருப்திக் குரலை எழுப்பியுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில்  டக்குகளுஅன் 26 ரன்களையே எடுத்தார், இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் அவர் ஆடவில்லை. பிறகு அணியிலிருந்தே நீக்கப்பட்டார்.

கருண் நாயர் விவகாரத்தில் கேப்டன் விராட் கோலியே தனக்கு அதில் எந்தவித பங்குமில்லை என்று தெரிவித்தார், ஹர்பஜன் சிங், ‘ஒரு சிலருக்கு நிறைய வாய்ப்புகள் மற்ற சிலருக்கோ ஒரு தோல்விக்குக் கூட வாய்ப்பில்லை உடனே நீக்கம், தேர்வுக்குழுவின் அளவுகோல்கள் என்ன’ என்று கேட்டு கடுமையாகச் சாடினார், முன்பே சுனில் கவாஸ்கர் இங்கிலாந்து தொடர் நடந்து கொண்டிருந்த போதே, ‘கருண் நாயரை இவர்களுக்குப் பிடிக்கவில்லை’ என்று சாடியிருந்தார்.

இந்நிலையில் மும்பை மிரர் பத்திரிகைக்கு முரளி விஜய் கூறியிருப்பதாவது:

3வது டெஸ்ட்டில் நான் நீக்கப்பட்ட பிறகு தலைமைத் தேர்வாளர் அல்லது வேறு எந்த நபரும் என்னுடன் தொடர்புகொள்ளவில்லை.  அதன் பிறகும் கூட யாரும் என்னைத் தொடர்பு கொண்டு பேசவில்லை. அணி நிர்வாகக் குழுவின் உறுப்பினர்கள் சிலருடன் இங்கிலாந்தில் இருந்த போது உரையாடினேன் அவ்வளவுதான்.

அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான அளவுகோல்கள் குறித்து ஹர்பஜ்சன் சிங் கூறிய விமர்சனங்களை நான் ஏற்கிறேன். ஒரு வீரரை அணியிலிருந்து நீக்கும் போது எதறகாக நீக்கப்படுகிறோம் என்று தெரியப்படுத்துவது அவசியம் என்று கருதுகிறேன். அப்போதுதான் எந்த வீரரும் அணிநிர்வாகத்தின் திட்டங்களில் அவரது நிலை என்ன என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு வீரராக ஒரு போட்டியா, அதற்கு மேல் வாய்ப்புகளா என்பதை வீரர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். எனவே கொஞ்சம் திட்டமிடுதலை சரிப்படுத்த முடியும். ஸ்திரத்தன்மை சந்தேகங்களை வெளியே தள்ளி விடும். என்ன உடனடித் தேவை, அணிக்குப் பங்களிப்புச் செய்ய ஒருவர் நன்றாக ஆடவேண்டும் அவ்வளவுதானே.

நான் ஆஸ்திரேலியா தொடருக்காக என் பாணியில் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அங்குள்ள பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகள் எனக்கு பரிச்சயமானவை. அங்கு 2014-15 தொடரில் 500 ரன்கள் பக்கம் அடித்தேன். எனவே வாய்ப்பு வந்தால் நான் தயாராக இருக்க வேண்டும். அணிக்குள் மீண்டும் நுழைய முயற்சி செய்யும் போது ரன்கள்தான் முகியம்.

இவ்வாறு கூறியுள்ளார் முரளி விஜய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x